MI vs PBKS IPL 2023 கடைசி ஓவரில் அர்ஷ்தீப் கலக்கல்! பஞ்சாப் அசத்தல் வெற்றி!

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக ஷார்ட் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். அவர்களின் நிதான ஆட்டத்தால் பெரிய அளவில் எந்த பலனும் கிடைக்கவில்லை. 3வது ஓவரில் தனது முதல் விக்கெட்டை இழந்தது பஞ்சாப் அணி.
3வது ஓவரின் 3வது பந்தில் ஷார்ட் அவுட் ஆகி வெளியேற, அவருக்கு பிறகு களமிறங்கினார் தாய்டே. சிம்ரன் சிங்குடன் சேர்ந்து அதிரடியாக ஆடினர். இந்நிலையில், 7வது ஓவரை வீசனார் அர்ஜூன் டெண்டுல்கர்.
இந்த ஓவரின் 4வது பந்தில் அவுட் ஆனார் பிரப்சிம்ரன் சிங். அவர் 17 பந்துகளில் 26 ரன்களை எடுத்திருந்தபோது எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து லியாம் லிவிங்ஸ்டன் களமிறங்கினார்.
10வது ஓவரின் முதல் பந்தில் லிவிங்ஸ்டனும் அவுட் ஆனார். அவர் 12 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஹர்பிரீத் சிங் பாட்டியா களமிறங்கி அசத்தினார். இருவரும் மும்பை அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.
நன்றாக ஆடிக் கொண்டிருந்த தாய்டே 17 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆக, அடுத்து வந்த சாம் கரண் மிகப் பெரிய ஆட்டம் ஆடி அணியின் ரன்னை உயர்த்தினர்.
சாம் கரணைத் தொடர்ந்து ஜிதேஷ் சர்மாவும் அவுட் ஆனார். சாம் கரண் 29 பந்துகளில் 55 ரன்களும், ஜிதேஷ் 7 பந்துகளில் 25 ரன்களையும் எடுத்து அவுட் ஆனார்கள்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி, 214 ரன்களை எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 96 ரன்களைக் குவித்தது. மும்பை அணி தரப்பில் கேமரூன் கிரீன், பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். பஞ்சாப் அணியின் பலம் வாய்ந்த பந்து வீச்சு கூட்டணி முதலில் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க திட்டமிட்டது. அதன் பலனாக அர்ஷ்தீப் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார் இஷான் கிஷன்.
ரோஹித் சர்மாவுடன் இப்போது கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை எகிறி அடிக்க, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ரோஹித் சர்மா 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த போது லியாம் லிவிங்ஸ்டன் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.
கேமரூன் கிரீன், சூர்யகுமார் இருவரும் பஞ்சாப் வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் அடித்து வெளுத்தனர். 15 ஓவர்களைக் கடந்த நிலையில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களைப் பெற்றிருந்தது மும்பை அணி.
அதுவரை நன்றாக விளையாடிக்கொண்டிருந்த கேமரூன் கிரீன் 43 பந்துகளில் 67 ரன்களுக்கு அவுட் ஆனார். நான் எல்லீஸ் பந்து வீச்சில் சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து டிம் டேவிட் களமிறங்கினார்.
சூர்யகுமார் யாதவ் மிகச் சிறப்பாக விளையாடி 23 பந்துகளில் அரைசதமடித்தார். கடைசி 3 ஓவர்களுக்கு 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. அப்போது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த டிம் டேவிட் ஒரு சூப்பரான சிக்ஸரை பறக்கவிட்டார்.
18வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங்கின் 4வது பந்தை அடிக்க முயற்சித்த சூர்யகுமார் அவுட் ஆனார். 26 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் மும்பை அணி ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்திருந்தது மும்பை அணி. இன்னும் 12 பந்துகளில் 31 ரன்கள் வேண்டும் எனும் நிலையில், டிம் டேவிட் மீண்டும் ஒரு சிக்ஸரை பறக்க விட்டார். 4 பந்துகளில் தலா இரண்டு ரன்கள் எடுக்க அந்த ஓவரில் மொத்தம் 15 ரன்கள் வந்தது.
கடைசி ஓவரில் மும்பை அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட அர்ஷ்தீப் சிங் பவுலிங் போட்டார். திலக் வர்மா, வதேரா ஆகியோரை அசத்தலாக அவுட் செய்தார். கிளீன் போல்டாகி வெளியேறியதும் மும்பையின் வெற்றி கனவாகியது.
பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
MI vs PBKS அணிகள் மோதல்
MI இன் சொந்த மைதானமான வான்கடே மைதானம் MI vs PBKS போட்டி நடைபெறும் இடம். ஐபிஎல் 2023ல் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோஹித் ஷர்மா வழிநடத்துகிறார். இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் உள்ளார்.
ஐபிஎல் 2023 இதுவரை
MI இதுவரை போட்டியில் 5 ஆட்டங்களில் விளையாடி, 3ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்துள்ளது. எனவே, அவர்கள் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி வெற்றி பெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக அவர்களின் இரண்டு தோல்விகள் வந்தன.
IPL 2023 இல் PBKS 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அவர்கள் 3 ஆட்டங்களில் வெற்றியும் 3 தோல்வியும் அடைந்துள்ளனர். எனவே, அவர்கள் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிரான மோதலில் பிபிகேஎஸ் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியடைந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu