டிம் டேவிட் அதிரடியால் மீண்டும் மும்பை அணி வெற்றி!
டிம் டேவிட் அதிரடியால் 17.4 ஓவர்களில் வெற்றிக்கான இலக்கை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது சூர்யகுமார் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் செய்யும் என முடிவெடுத்ததால் கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக ரஹமனுல்லா குர்பாஸ் மற்றும் நாராயணன் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே நாராயணன் ஜெகதீசன் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சியளித்தார். நல்ல வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என ரசிகர்கள் வருந்தும்படி செய்துவிட்டார்.
அவரைத் தொடர்ந்து கொல்கத்தா அணியின் அடுத்த பேட்ஸ்மென்னாக களமிறங்கியது வெங்கடேஷ் ஐயர். இவர் இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் 8 ரன்கள் எடுத்திருந்த குர்பாஸும் அவுட் ஆக தனது பொறுப்பை உணர்ந்து ஆடத் துவங்கினார் வெங்கடேஷ் ஐயர்.
வெங்கடேஷ் ஐயர் ஒருபுறம் நிலைத்து நின்று அடித்து ஆட, மறுபுறம் நிதிஷ் ராணா 10 பந்துகளைச் சந்தித்து 5 ரன்களிலும், ஷர்துல் தாகூர் 11 பந்துகளைச் சந்தித்து 13 ரன்களிலும், ரிங்கு சிங்க் 18 பந்துகளில் 18 ரன்களை அடித்தும் அவுட் ஆகி வெளியேறினார்கள்.
வெங்கடேஷ் ஐயர் மும்பை அணி பந்து வீச்சாளர்களின் கணிப்பை தவிடு பொடியாக்கி எல்லா திசைகளிலும் பவுண்டரிகளை விரட்டினார். சிக்ஸர்களை பறக்கவிட்டார். மொத்தம் 6 பவுண்டரிகள் 9 சிக்ஸர்களை அடித்து 104 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார் வெங்கடேஷ். அவருக்கு பிறகு களமிறங்கிய ஆண்ட்ரூ ரஸல் 11 பந்துகளில் 21 ரன்களையும், சுனில் நரேன் 2 ரன்களையும் அடித்து களத்தில் நின்றனர்.
கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்திருந்தது. மும்பை அணி சார்பில் ஹ்ரித்திக் ஷோகீன் 2 விக்கெட்டுகளையும், கேமரூன் க்ரீன், டுவன் ஜான்சென், ப்யூஸ் சாவ்லா, ரிலே மெரடித் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள மும்பை அணி அதிரடியாக விளையாடியது. துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் இஷான் கிஷணும் களமிறங்கினார்கள்.
ரோஹித் சர்மா 13 பந்துகளைச் சந்தித்து 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுயாஷ் சர்மா பந்துவீச்சில் உமேஷ் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து சூர்யகுமார் இஷானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி இலக்கை நோக்கி மும்பை அணியை நகர்த்தி கொண்டு சென்றனர்.
வருண் சக்ரவர்த்தி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார் இஷான் கிஷன். இவர் 25 பந்துகளில் 58 ரன்கள் அதிரடியாக குவித்தார். இதனால் மும்பை அணிக்கு வெற்றி வாய்ப்பு எளிதாக அமைந்தது.
அடுத்து வந்த திலக் வர்மாவும் 25 பந்துகளுக்கு 30 ரன்கள் அடித்தார். அடுத்து டிம் டேவிட் களமிறங்கினார். 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து மும்பை அணியை வெற்றி பெறச் செய்தார்.
20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை அணி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu