சுழலில் சிக்கி ஆட்டமிழந்த டாப் வீரர்கள்! யார் இந்த மேத்யூ குன்மன் ?

மேத்யூ பால் குன்மன் என்ற ஆஸ்திரேலிய இளைஞரின் பந்து வீச்சில் இந்தியாவின் மிகச் சிறந்த பேட்ஸ்மன்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் என மூன்று பேரும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதில் ஷ்ரேயாஸ் டக் அவுட் ஆனார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் இவர் விளையாடவில்லை. இரண்டாவது ஆட்டத்திலும் பெரிதாக விளையாடவில்லை. ஆனால் மூன்றாவது ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை எடுத்து இந்திய அணி வீரர்களை கதிகலங்க வைத்துவிட்டார்.
இப்போதுதான் முதல்முறையாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார் மேத்யூ குன்மன். இரண்டாவது போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் அவர் முந்தைய ஆட்டத்தில் 2 விக்கெட்களையும் இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இவர் திகழ்வார் என்று கணிக்கப்படுகிறது.
ஆட்டம் | போட்டி | இன்னி. | பந்துகள் | மெய்டன் | ரன்கள் | விக்கெட் | சிறந்த பந்துவீச்சு | எகானமி | சராசரி | SR | 4W | 5W |
TEST | 2 | 3 | 171 | 4 | 110 | 2 | 14/3 | 3.85 | 55.0 | 85.5 | 0 | 0 |
ODI | 4 | 4 | 228 | 3 | 191 | 6 | 26/2 | 5.02 | 31.8 | 38.0 | 0 | 0 |
பிறப்பு: செப்டம்பர் 20, 1996 (27 years)
பிறந்த இடம்: பிரிஸ்பேன் , குயின்ஸ்லாந்து
பங்கு: பௌலர்
பேட்டிங் ஸ்டைல்: இடது கை
பந்துவீச்சு ஸ்டைல்: இடது கை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu