பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
X

பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். அருகில் அமைச்சர் துரை முருகன், கனிமொழி எம்பி.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 54 வீரர்களும் 9 வீராங்கனைகளும் பங்கேற்கேற்றுள்ளனர்.

இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்.சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் 2வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.


கடந்த முறை 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோடி ஜெனிவா பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார். தற்போது டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸிலும் பதக்கம் வென்றுள்ளார்.

பதக்கம் பெற்று டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தார். தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்வேலுவுக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி கருணாநிதி எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களும் மாரியப்பனுக்க வாழ்த்துக் கூறினர்.

Tags

Next Story
ai based agriculture in india