லக்னோ அணி 1 ரன்னில் வெற்றி! போராடி தோற்ற கொல்கத்தா!

லக்னோ அணி 1 ரன்னில் வெற்றி! போராடி தோற்ற கொல்கத்தா!
X
லக்னோ அணி வெற்றி! கடைசி வரை போராடி 1 ரன்னில் தோற்ற கொல்கத்தா அணி!

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் நிக்கோலஸ் பூரன் (58), குயின்டன் டி காக்(28), மாண்கட்(26) ஆகியோர் ஓரளவுக்கு ரன் குவித்தனர். மற்றவர்கள் பெரிய ஸ்கோரை குவிக்கவில்லை.

கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஷர்துல் தாகூர், சுனில் நரேன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.

Tags

Next Story
தைப்பூசத்தை ஒட்டி நிலாச்சோறு..!விடிய விடிய கும்மியடித்து, பாடல்கள் பாடி மகிழ்ந்த பெண்கள்