மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி!

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனால் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
லக்னோ அணியின் துவக்க வீரர்களாக தீபக் ஹூடா, குயின்டன் டிகாக் ஆகியோர் களமிறங்கினர். தீபக் ஹூடா 5 ரன்களும், குயின்டன் டிகாக் 16 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். மான்கட் டக் அவுட் ஆனார்.
குருனால் பாண்டியா 42 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தார். மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 47 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரன் 8 ரன்களில் களத்தில் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி 177 ரன்கள் எடுத்திருந்தது.
178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை அணி.
மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு நல்ல பார்ட்னர்ஷிப்பைக் கொடுத்தனர். இஷான் கிஷன் 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 25 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
சூர்யகுமார் 7 ரன்களில் அவுட் ஆக, வதேரா 16, விஷ்ணு வினோத் 2, கேமரூன் க்ரீன் 4 என அவுட் ஆகினர். டிம் டேவிட் 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தாலும் கடைசி ஓவரில் இலக்கை எட்ட முடியாமல் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை லக்னோவிடம் பறிகொடுத்தது.
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu