பூரனின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ சூப்பர் வெற்றி!

பூரனின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ சூப்பர் வெற்றி!
X
19.2 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்த லக்னோ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தியது.

டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனால் ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அன்மோல்ப்ரீத் சிங், அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். மிகவும் நிதானமாக தனது ஆட்டத்தை துவங்கிய அபிஷேக், 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். யுத்விர் சிங் வீசிய பந்தில் குயின்டன் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்கினார்.

அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் ராகுல் திரிபாதி கொஞ்சம் ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டினர். 27 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில் அமித் மிஸ்ரா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவருக்கு பிறகு கேப்டம் மார்க்ரம் களமிறங்கினார்.

ராகுல் திரிபாதியுடன் சேர்ந்து மார்க்ரம் சிறிது நேரம் அதிரடியாக விளையாடினார். அவர் 28 ரன்களில் அவுட் ஆக, விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாஸன் 29 பந்துகளில் 47ரன்கள் எடுத்தார். அடுத்து அப்துல் சமாத் தன் பங்குக்கு 25 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி, 182 ரன்கள் எடுத்திருந்தது.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.2 ஓவரில் இலக்கை அடைந்தது.

கைல் மேயர்ஸ் 14 பந்துகளைச் சந்தித்து 2 ரன்களில் அவுட் ஆனாலும். அடுத்து வந்த மான்கட் மிகப்பெரிய ஆட்டம் ஆடினார். குயின்டன் டி காக் தனது பங்குக்கு 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மான்கட் மற்றும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் லக்னோ அணிக்கான வெற்றிப் பாதையை மிக அதிரடியாக உருவாக்கினர். 25 பந்துகளில் 40 ரன்கள் குவித்த ஸ்டொய்னிஸ் அவுட் ஆனதும் ஒரு நிமிசம் வெற்றிக்கான நேரம் தாமதமாகும் என்று தோன்றியது. ஆனால் பூரன் மொத்தமாக சேர்த்து செய்துவிட்டார். 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 13 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து லக்னோ அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

19.2 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்த லக்னோ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தியது

Tags

Next Story