லக்னோவிடமிருந்து வெற்றியைத் தட்டிப்பறித்த பஞ்சாப்!

ஷிகர்தவான், ராஜபக்ஷா இல்லாத பஞ்சாப் அணியை வழிநடத்துகிறார் சாம் கரண். இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் லக்னோ அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.
லக்னோ அணியின் துவக்க வீரர்களாக கே எல் ராகுல், கைல் மேயர்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே மெதுவாக ஆடிய இருவரும் ரன்னை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினர். பவர்பிளேயில் பெரிய அளவு ஸ்கோர் இல்லை என்றாலும் ஓரளவுக்கு ரன்களை குவித்தனர் லக்னோ வீரர்கள்.
நன்றாக விளையாடிக் கொண்டிருந்த மேயர்ஸ் 8வது ஓவரில் அவுட் ஆனார். ஹர்பிரீத் ப்ரார் வீசிய பந்தில் ஹர்பிரீத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து தீபக் ஹீடா களமிறங்கினார். சிக்கந்தர் ராஸா வீசிய பந்தில் அவரும் அவுட் ஆகி வெளியேற அடுத்து குருணால் பாண்டியா வந்தார். அவர் தனது பங்குக்கு 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து நிக்கோலஸ் பூரனும் டக் அவுட் ஆனார்.
இப்படி லக்னோ அணியின் வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அதன் பிறகு யாருமே பெரிய ரன்னை எட்டாத நிலையில் அடுத்தடுத்து தன் விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்தது.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது. பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக அதர்வா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். துரதிஷ்டவசமாக 3வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார் அதர்வா டைட்.
இதனைத் தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங்குடன் ஜோடி சேர்ந்தார் மேட் ஷார்ட். இவர் லக்னோ அணி பந்து வீச்சை சரியாக கணித்து ஆடினார். இந்நிலையில் பிரப்சிம்ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர 4 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்து ஹர்ப்ரீத் சிங் அவருடன் ஜோடி சேர்ந்தார். மேட் ஷார்ட் தனது ஷாட்களை கச்சிதமாக ஆடி வந்தார். ஆனால் 6வது ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவரது விக்கெட்டை கிருஷ்ணப்பா கௌதம் எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்தார் சிக்கந்தர் ராஸா களமிறங்கினார். இருவரும் லக்னோ பந்து வீச்சை வெளுத்தனர். பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது. ஆனால் ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் சிக்கந்தார் ராஸா அவுட் ஆக, பஞ்சாப் அணி வெற்றி மீது நம்பிக்கை குறைந்தது.
அதே நேரம் ஷாருக்கான் களத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்பதால் பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பு துளிர்விட்டது. கடைசிக்கு முந்தைய ஓவரை மார்க் வுட் வீசினார்.
அவர் வீசிய 2வது பந்தில் ஷாருக்கான் ஒரு சிக்ஸ் அடிக்க, 4வது பந்தில் ஹர்ப்ரீத் பவுண்டரி ஒன்றை எடுத்தார். இதன்மூலம் 8 பந்துக்கு 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. மார்க்வுட் வீசிய 5வது பந்தில் அவுட் ஆனார் ஹர்ப்ரீத். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 7 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் முதல் பந்திலேயே 2 ரன்கள் ஓடினர். 2 வது பந்தில் மீண்டும் 2 ரன்கள் எடுத்தார்கள். 3 வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி பஞ்சாப் அணிக்கு வெற்றி தேடி தந்தார் தமிழக வீரர் ஷாருக்கான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu