லியோ 100... ரசிகர்கள் கொண்டாட்டம்... ! நேற்று படைக்கப்பட்ட சாதனை!

லியோ 100... ரசிகர்கள் கொண்டாட்டம்... ! நேற்று படைக்கப்பட்ட சாதனை!
X
அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி இதுவரை 99 கோல்கள் அடித்திருந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 100வது கோலை அடித்து பெரும் சாதனையை படைத்தார். சர்வதேச அளவில் 100 கோல்கள் என்ற கணக்கை அடைந்த 3வது வீரர் இவராவார்.

அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேற்று விளையாடிய குரசாவ் அணி கோல் எதுவும் அடிக்காமல், வீழ்ந்தது. இதில் அர்ஜென்டினா அணி 7 கோல்கள் அடித்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து தொடரில் வேற லெவலுக்கு இறங்கி ஆடிய அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பிறகும் அதே வேகத்தில் விளையாடி எதிரணிகளை பந்தாடி வருகிறது. அதற்கு நேற்று நடந்த போட்டி ஒரு சாம்பிள்.

குரசவ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே நேற்று உற்சாகமாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பகுதியிலிருந்தே அர்ஜென்டினாவின் கையே ஓங்கி இருந்தது. அர்ஜென்டினா வீரர்கள் எதிரணி வீரர்கள் காலுக்கு பந்து போகாமலேயே பார்த்துக் கொண்டனர். குரசவ் வீரர்களும் சளைக்காமல் போராடினார்கள். ஆனால் நேற்றைய நாள் அர்ஜென்டினாவுக்கானது.

மெஸ்ஸி இந்த ஆட்டத்தில் மிகப் பெரிய சாதனையைப் படைக்க இருக்கிறார் என்கிற செய்தி கால்பந்து ரசிகர்களை கடந்த வாரமாகவே கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருந்தது. அர்ஜென்டிவுக்காக விளையாடி மெஸ்ஸியின் 100 வது கோல் அடிக்கும் சாதனையைக் காண மைதானத்தில் திரண்டனர் அவரது ரசிகர்கள். உள்ளூரில் போட்டி நடைபெறுவதால் மைதானம் முழுக்க அர்ஜென்டினாவுக்கு ஆதரவான குரல்களே ஏராளம்.

11 வது மற்றும் 13வது நிமிடங்களிலே மெஸ்ஸி கோல் அடிக்கும் வாய்ப்பை உருவாக்கினார். ஆனால் மயிரிழையில் தப்பிப் போனது. அதன் பிறகு குரசவ் அணி வீரர்கள் அர்ஜென்டினாவுக்கு எதிராக கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் 20 நிமிடங்கள் எந்த கோலும் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

மெஸ்ஸி அவர்களது நம்பிக்கையான ஆட்டத்தை தவிடுபொடியாக்கினார். முதல் கோலை அடித்ததும் குரசவ் வீரர்கள் சோர்ந்து போய்விட்டனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் நேற்றைய ஆட்டம் நடைபெறவில்லை. அர்ஜென்டினாவுக்கு எதிராக தங்களால் கோல் அடிப்பது மிக மிக கடினம் என்பதை உணர்ந்த குரசவ் வீரர்கள் குறைந்தபட்சம் கோல் விழாமல் தடுக்கலாம் என தடுப்பாட்டம் ஆடியதும் அவர்களது தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி இதுவரை 99 கோல்கள் அடித்திருந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 100வது கோலை அடித்து பெரும் சாதனையை படைத்தார். சர்வதேச அளவில் 100 கோல்கள் என்ற கணக்கை அடைந்த 3வது வீரர் இவராவார்.

அர்ஜென்டினா அணி உலக கோப்பையை வென்ற 100வது நாளில் தனது 100வது கோலை அர்ஜென்டினா அணிக்காக அடித்து பெருமை சேர்த்தார்.

மெஸ்ஸி கோல் அடித்து கொண்டாடிய சில நிமிடங்களிலேயே அதே அணிக்காக விளையாடும் நிக்கோலஸ் ஒரு கோல் அடிக்க ஆட்டம் வேகமாக சூடு பிடித்தது. எதிரணி ஏகப்பட்ட திட்டங்களை இட்டு களமிறங்கினாலும் அர்ஜென்டினாவை எதுவும் செய்யமுடியவில்லை. அடுத்து 33, 37 வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து (மொத்தம் 3 ) ஹாட்ரிக் கோல் அடித்த சாதனையை பெற்றார் மெஸ்ஸி.

முதல் பாதியில் 5 கோல்களை அடித்த அர்ஜென்டினா அணி வீரர்கள் அடுத்த பாதியில் இன்னும் இரு கோல்கள் அடித்து மொத்தம் 7 கோல்களுடன் இந்த போட்டியில் வெற்றி பெற்றனர். எதிரணி வீரர்கள் கோல்கள் அடிக்க போட்ட திட்டம் அர்ஜென்டினா வீரர்களால் தவிடுபொடியானது.

Tags

Next Story