கராத்தே போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்த தூத்துக்குடி மாணவிக்கு பாராட்டு
கராத்தே போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநில அளவிலான கராத்தே போட்டியில் முதலிடம் பெற்ற வீராங்கனை வைஷ்ணவிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி வாழ்த்து தெரிவித்தார்.
ஊட்டியில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இதில் தூத்துக்குடி விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வரும் மாணவி வைஷ்ணவியும் பங்கேற்றார். இவர் முறையாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். மேலும் மாவட்ட அளவில் பல்வேறு கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். கராத்தே வீராங்கனை வைஷ்ணவி அண்மையில் ஊட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதி இருந்தும் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டணத் தொகையை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. காரணம் அவரது வீட்டில் பெற்றோரால் உரிய தொகையை செலலுத்த முடியாத நிலை இருந்தது.
இதனை தொடர்ந்து மாணவி வைஷ்ணவி தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எஸ். ஜே. கென்னடியின் உதவியை நாடினார். மாணவி வைஷ்ணவிக்கு போட்டியில் கலந்து கொள்வதற்கான உபகரணங்கள் கட்டணம் மற்றும் போக்குவரத்து செலவின தொகையை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி வழங்கினார். இந்த உதவியை பெற்ற கராத்தே வீராங்கனை எஸ். வைஷ்ணவி மற்றும் சகோதரி எஸ் மேனகா ஆகியோர் ஊட்டியில் மாநில அளவில் நடைபெற்ற. கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் கராத்தே வீராங்கனை வைஷ்ணவி மாநில அளவில் முதல் பரிசையும் மற்றும் சகோதரி மேனகா மூன்றாவது பரிசையும் பெற்றனர். கராத்தே வீராங்கனை எஸ் வைஷ்ணவி எஸ் மேனகா ஆகியோர் மாநில அளவில் போட்டியில் கலந்து கொள்ள தனக்கு உதவிய மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடியை தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள மதர் சமூக சேவை நிறுவன அலுவலகத்தில் நேரில் சென்று போட்டியில் தான் பெற்ற வெற்றி கோப்பையையும், சான்றிதழையும் காட்டி மகிழ்ந்தனர்.
நேரில் வந்த கராத்தே வீராங்கனைகள் வைஷ்ணவி மற்றும் மேனகா ஆகிய இருவருக்கும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி பொன்னாடை போர்த்தி வாழ்த்தி, பாராட்டி, மகிழ்ந்தார். அப்போது மாணவிகள் இதுபோன்ற வீர விளையாட்டுகளில் முறையான பயற்சி பெற்று மாநில அளவிலான மற்றும் தேசிய, சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று சாததனை படைக்க வேண்டும். வருங்காலங்களில் மாணவ, மாணவிகள் விளையாட்டு மற்றும் படிப்பு ஆகிய இரண்டையும் இரு கண்கள் போல பாவித்து கவனம் செலுத்தி நம் நாட்டிற்கும், நம் தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ். பானுமதி, கராத்தே வீராங்கனைகளின் தந்தை சடகோபன் , டிராகன் கராத்தே பயிற்சி பள்ளி மாஸ்டர் விஜயசேகர், சமூக ஆர்வலர் கல்விளை ஜெயபால் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu