சென்னை அணி அதிர்ச்சி தோல்வி!

சென்னை அணி அதிர்ச்சி தோல்வி!
X
சென்னை அணி அதிர்ச்சி தோல்வி! கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதுவே சென்னை அணிக்கு பாதகமாக அமைந்தது. கொல்கத்தா வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் எளிதில் சென்னை அணியைத் தோற்கடித்தது.

சென்னை அணியின் துவக்க வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே களமிறங்கினர்.

3 ஓவர்களில் பெரிய ரன்கள் எதுவும் எடுக்கமுடியாத நிலையில், 4வது ஓவரின் 3 வது பந்தில் ருத்துராஜ் அவுட் ஆனார். வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் வைபவ் அரோராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து அஜிங்யா ரஹானோ களமிறங்கினார்.

டெவான் கான்வே மற்றும் அஜிங்யா ரஹானே ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், ரஹானேவும் அவுட் ஆகி வெளியேறினார்.

டெவான் கான்வே 30 ரன்களும், ஷிவம் டுபே 48 ரன்களும் எடுத்திருந்தார். ரவீந்திர ஜடேஜா 20ரன்கள் எடுத்திருந்த நிலையில், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் எடுத்திருந்தது.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை கொல்கத்தாவின் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் இருவரும் இருந்து எளிதாக எட்டினர். இதன் மூலம் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags

Next Story