RCB அணிக்கு மாறிய சென்னை வீரர்! கடைசி நேரத்தில் ஷாக்!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளையாடிய வீரர் ஒருவர் இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக களம் இறங்குவார் என்று தெரிகிறது.
ஐபிஎல் 2023 தொடரின் 42வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறது. இதில் டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இதனிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்த டேவிட் வில்லி காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார். இதன் காரணமாக அந்த வீரருக்கு பதிலாக விளையாட ஒரு நபர் தேவைப்பட்டது ஆர்சிபி அணிக்கு. இதனால் அந்த இடத்தில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
அவர் வேறு யாருமில்லை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதற்கு முன்னால் இதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய கேதார் ஜாதவ் தான். இவர்தான் டேவிட் வில்லிக்கு பதிலாக விளையாட இருக்கும் ஆர்சிபியின் மிடில் ஆர்டர் பிளேயர் என அந்த அணி அறிவித்திருக்கிறது.
டேவிட் வில்லி இதுவரை ஆடியும் பெரிய பாதிப்பை அணிக்கு அளிக்கவில்லை. கோலி, டூப்ளஸிஸ், மேக்ஸ்வெல் தவிர மற்ற எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை. இதனால் வில்லி வெளியேறியதில் பெங்களூரு அணி ரசிகர்கள் வருத்தப்படவே இல்லை. ஆனால் கடந்த 3 சீசன்களாக பாஃர்மில் இல்லாத கேதார் ஜாதவ் அணிக்கு திரும்பியிருப்பதால் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். அவரை எடுத்து வைத்து என்ன செய்ய என்று பலர் கேட்டு வருகின்றனர். ஆனால் சென்னைக்காக விளையாடிய அவர் பெரிய அளவில் டிரோல் செய்யப்பட்டாலும் பெங்களூரு அணிக்காக மிகப் பெரிய பலமாக திகழ்ந்தவர்.
பெங்களூரு அணியின் மிடில் ஆர்டரில் அவர் அடித்த அடியால்தான் சென்னை அணி அவரைத் தேர்ந்தெடுத்தது. ஆனால் சென்னை அணிக்காக அவர் பெரிய ஸ்கோர் எதுவும் அடிக்கவில்லை.
இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒரே ஆறுதல் இந்த ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை என்பதுதான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu