மணப்பாறையில் கருணாநிதி நூற்றாண்டு விழா அகில இந்திய கபடி போட்டி
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கோவில்பட்டி சாலையில் உள்ள பிரமாண்ட திடலில் மணப்பாறை ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையில் அகில இந்திய அளவிலான கபடி போட்டிகள் நேற்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறுகின்றது.
இந்த போட்டியில் ஹரியானா, டெல்லி, கேரளா, உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 60 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளது. இதே போல்பல்வேறு துறைகளை சார்ந்த அணிகளும், புகழ்பெற்ற கபடி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். ஆண், பெண் என அணிகளுக்கு தனி தனியாக நடைபெறும் கபடி போட்டியின் தொடக்கமாக நேற்று முதல் போட்டியை தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மதிவாணன் தொடங்கி வைத்தார். ஆனால் போட்டி தொடங்கியதுமே மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து பெய்த மழையால் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
இன்றிலிருந்து தொடர்ந்து நடைபெறும் போட்டியின் நிறைவாக இறுதி போட்டி ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. இந்த போட்டியை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைப்பதோடு பரிசுகள் வழங்குகின்றனர்.
இதில் ஆண்கள் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.50 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ஒரு லட்சமும், 3ம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரத்து ஒரு ரூபாயும், 4ம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்படஉள்ளது. இதே போல் பெண்கள் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 1.25 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 75 ஆயிரமும், 3 ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 50 ஆயிரத்து ஒரு ரூபாயும், 4ம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரமும் பரிசுகள் வழங்கப்படஉள்ளது. போட்டியை பார்வையாளர்கள் கண்டுகளிக்கும் வகையில் பிரமாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu