ஜான் சீனாவுக்காக போட்டா போட்டி போட்ட ரசிகர்கள்!

ஜான் சீனாவுக்காக போட்டா போட்டி போட்ட ரசிகர்கள்!
X
ஜான் சீனா கழற்றி எறிந்த டி சர்ட்டுக்காக சண்டை போட்ட ரசிகர்கள்.. WWE போட்டியில் சுவாரஸ்ய நிகழ்வு

இந்தியாவில் நடைபெற்ற WWE போட்டியில் ஜான் சீனாவால் ஒரு பிரச்னை உருவாகியது. ஆனால் அதை பெரிய அளவில் கொண்டு செல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர்.

ஜான் சீனா, செத் ரோலின்ஸ், ரியா ரிப்லி உள்ளிட்ட முன்னணி WWE வீரர்கள் இந்தியாவில் WWE Superstar Spectacle நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனால் இந்திய ரசிகர்கள் குஷியாகினர். தங்களது ஃபேவரைட் WWE வீரர்களைக் காண ஆவலோடு காத்திருந்தனர். ஹைதரபாத்துக்கு படையெடுத்தனர்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைந்து உள்ள காச்சிபௌலி உள் விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்றது. இதனைக் காண இந்தியா முழுக்க இருந்து சுமார் 5000 ரசிகர்கள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் இந்த போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஜான் சீனா - செத் ரோலின்ஸ் டேக் டீம் போட்டிதான். ஜான் சீனா போட்டி தொடங்கிய உடனேயே தனது ஜெர்சியை கழற்றி ரசிகர்களிடம் வீசினார். ஜான்சீனா வழக்கம்போல உள்ளே வந்தவுடன் தனது ஜெர்ஸியைக் கழற்றி வீசினார். அது ரசிகர்கள் கூடிய ஒரு கூட்டத்தின் நடுவே விழுந்தது.

அதை கீழே இருந்த ஐந்து ரசிகர்கள் ஒரே நேரத்தில் பிடித்துக் கொண்டு விட மறுத்தனர். அவர்கள் அனைவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. யார் அந்த டிசர்ட்டை எடுத்துக் கொள்வது என சண்டை போட ஆரம்பித்துவிட்டனர். பலரும் இருவருக்குள்ளும் சண்டையை தீர்க்க முயன்றும் இருவருமே விட்டுக் கொடுக்காமல் சற்று நேரம் சண்டையைத் தொடர்ந்தனர்.

இருந்தபோதிலும், அது போட்டியை பாதிக்கவில்லை. ஜான் சீனா - செத் ரோலின்ஸ் கைசர் - வின்சி ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த போட்டியைக் கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வுமன்ஸ் சாம்பியன் ரியா ரிப்லி, நடால்யா வுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தன் சாம்பியன்ஷிப்பை தக்க வைத்துக் கொண்டார். இந்திய வீரர்களான ஜிந்தர் மஹால், வீர் மகான், சங்கா ஆகியோர் மற்றொரு டேக் டீம் போட்டியில் சாமி ஸெய்ன், கெவின் ஓவன்ஸ், டிரூ மெக்கின்டயர்-இடம் தோல்வி அடைந்தனர்.

முன்னதாக இந்த போட்டிகள் இந்தியாவில் முதன்முறையாக நடைபெற இருந்த நிலையில், அதனை விளம்பரப்படுத்த WWE சூப்பர் ஸ்டார்களுடன் நடிகர் கார்த்தி இணைந்திருந்தார். அவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகின.

Tags

Next Story
ai healthcare products