இங்கிலாந்து டெஸ்ட்: உலக சாதனை படைத்த பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா
கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.முதல் இன்னிங்சில் இந்திய அணி 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அதிரடியா விளையாடிய பண்ட் 146 ரன்களும் ,ஜடேஜா 104 ரன்களும் ,பும்ரா 31 ரன்களும் எடுத்தனர்.
2வது நாளில் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஓவரை வீசினார்.
இங்கிலாந்து அணியின் 84வது ஓவரை வீசிய பிராட், அந்த ஒரு ஓவரில் 35 ரன்களை விட்டுக்கொடுத்தார், அதில் ஐந்து வைடுகள் மற்றும் ஒரு நோ-பால் . இந்திய கேப்டன் அந்த ஓவரில் நான்கு பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில், பும்ரா ஒரு அபாயகரமான சிங்கிள் எடுத்ததார்.
முதல் பந்து, ஷார்ட்-பிட்ச் பந்தாக வர, ஃபைன் லெக்கை நோக்கி பும்ரா ஒரு டாப்-எட்ஜ் பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்தில், விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் பிடிக்க முடியாத அளவுக்கு ஒரு பவுன்சரை வீச பந்து பவுண்டரிக்கு பறந்தது. .
அடுத்த வீசிய பந்து நோ-பாலாக அதில் சிக்ஸரை அடித்தார் பும்ரா. பிராட் மோசமான நிலைக்குச் சென்றார்;பும்ராவின் பேட்டில் இருந்து மற்றொரு டாப்-எட்ஜ் கீப்பரின் தலைக்கு மேல் பறந்தது.
பிராட், பின்னர், ஒரு யார்க்கரை முயற்சித்தார் ஆனால் அது ஒரு ஜூசி ஃபுல் டாஸ் ஆகவே, பும்ரா மிட்-ஆன் பவுண்டரிக்கு அனுப்பினார்.
நான்காவது பந்தில் அந்த ஓவரின் நான்காவது பவுண்டரியை இந்திய கேப்டன் அடித்து நொறுக்கினார். பிராட் மீண்டும் ஷார்ட் பால் போடவே அது சிக்ஸருக்கு பறந்தது. கடைசி பந்தில், பும்ரா வேகமாக ஒரு சிங்கிள் எடுத்தார், பிராட் அந்த ஓவரில் 35 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
ஓவரில் எக்ஸ்ட்ராக்கள் சேர்க்காமல், பும்ரா பிராடுக்கு எதிராக 29 ரன்கள் எடுத்தது ஒரு உலக சாதனை.
2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ராபின் பீட்டர்சனை 28 ரன்களுக்கு அடித்திருந்த பிரையனின் லாரா சாதனையை பும்ரா முறியடித்தார். ஜார்ஜ் பெய்லி (ஆஸ்திரேலியா) மற்றும் கேசவ் மகாராஜ் (தென்னாப்பிரிக்கா) ஆகியோரும் இதற்கு முன்பு ஒரு ஓவரில் 28 ரன்கள் எடுத்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu