தோனியின் அசத்தல் பேட்டிங் கடைசி ஓவரில் சிஎஸ்கே த்ரில் வெற்றி பெற்றது

தோனியின் அசத்தல் பேட்டிங் கடைசி ஓவரில் சிஎஸ்கே த்ரில் வெற்றி பெற்றது
X
ஐபிஎல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சிஎஸ்கே த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சிஎஸ்கே த்ரில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 156 ரன்களை இலக்காக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. இருப்பினும் தோனி அதிரடியால் சென்னை தனது 2வது வெற்றியை பெற்றது.

இதன் மூலம் கால சக்கரத்தை தோனி 10 ஆண்டுகளுக்கு முன் திருப்பினார் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து, மும்பை அணி பேட்டிங் செய்ய வந்தது. சிஎஸ்கே இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி அனல் பறக்க பந்துவீசி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். முதல் ஓவரின் 2வது பந்திலேயே ரோகித் சர்மா, சாண்டனரிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.இதே போன்று முதல் ஓவரின் 5வது பந்தில் முகேஷ் சௌத்ரி வீசிய 5வது பந்தில் இஷான் கிஷன் கிளின் போல்ட் ஆகி டக் அவுட் ஆனார்.இதே போன்று முகேஷ் சௌத்ரி வீசிய 2வது ஓவரில் பிரவீஸ் தோனியிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதன் மூலம் மும்பை அணி 23 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சில் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அப்போது களத்துக்கு வந்த பொலார்ட், சிக்ஸ் அடித்து சிஎஸ்கேவை மிரள வைத்தார். எனினும் முன்னாள் கேப்டன் தோனி பொலார்ட்க்கு பவுண்டரி லைனில் அவருக்கு நேராக ஃபில்டரை வைத்தார்.

அப்போது தீக்சணா பந்துவீச்சை தூக்கி அடித்து தோனி வைத்த பொறியில் எலி போல் சிக்கினார் பொலார்ட். இறுதியில் திலக் வர்மா பொறுப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 155 ரன்களை எடுத்தது.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் அரம்பமே அதிர்ச்சிகரமாக அடைந்தது. முதல் பந்திலேயே ருத்துராஜ் கோல்டன் டக் அவுட் ஆனார். மிட்செல் சாட்ணர் 11 ரன்களில் ஆட்டமிழக்க, உத்தப்பா பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்து 30 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் சிஎஸ்கே அணி சற்று தடுமாறியது.இருப்பினும் ராயுடு 40 ரன்கள் எடுக்க, பிரிட்டோரியஸ் 14 பந்தில் 22 ரன்கள் அடித்தார்.

இதனால் கடைசி ஓவரில் 17 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. உனாட்கட் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் பிரிட்டோரியஸ் ஆட்டமிழக்க, 2வது பந்தில் பிராவோ ஒரு ரன் ஓடினார். இதனால் 4 பந்துக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் தோனி 6 விளாசினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.

இதனால் 2 பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. ஆனால் 5வது பந்தில் தோனி 2 ரன் எடுக்க, கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்டது. ஆனால் தோனி பவுண்டரி விளாசி சென்னைக்கு த்ரில் வெற்றியை பெற்று தந்தார். இதன் மூலம் தொடர்ந்து 7 போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவியது

Next Story
future ai robot technology