தமிழக வீரர் டி.நடராஜன் ரூ.4 கோடிக்கு ஏலம் மீண்டும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்

தமிழக வீரர் டி.நடராஜன் ரூ.4 கோடிக்கு ஏலம் மீண்டும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்
X

தமிழக வீரர் டி.நடராஜனை மீண்டும் சன்ரைசர்ஸ் ஏலத்தில் எடுத்தது

பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் தமிழக வீரர் டி.நடராஜனை மீண்டும் சன்ரைசர்ஸ் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்று பெங்களூருவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த மெகா ஏலத்தில் மொத்தமாக 590 வீரர்கள் ஏலம் விடப்பட்டுள்ளனர்.

ஏலத்தில் யார் யார் எந்தெந்த அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர் என்ற விபரம்

இதுவரை அதிகபட்சமாக இஷான் கிஷனை 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

அடுத்தபடியாக 14 கோடி ரூபாய்க்கு தீபக் சஹரை ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

தமிழக வீரர் நடராஜனை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டு பிளெசிஸை 7 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இன்று நடைபெற்ற ஏலத்தில் முதல் வீரராக ஷிகார் தவானை 8.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.

டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயஸ் அயரை 12.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

அனுபவம் வாய்ந்த வேகபந்து வீச்சாளர் முகமது ஷமியை 6.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் டைடன்ஸ்.

தமிழ்நாட்டை சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

மேற்கு இந்திய வீரரான ஜேசன் ஹோல்டர் 8.5 கோடி ரூபாய்க்கு லக்னெவ் சூப்பர் ஜெயின்ட் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

யுவேந்திர சாஹலை யுவேந்திர ரூ.6.5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

பேபி ஏ.பி. டிவில்லியர்ஸ் என்றழைக்கப்படும், டேவல்ட் ப்ரேவிஸ்-ஐ ரூ. 3 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

ராகுல் திரிபாதி ராகுல் திரிபாதியை ரூ.8.5 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி!

தமிழக வீரர் ஷாருக்கானை ரூ.9 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி!

ஷர்துல் தாக்கூர் ஷர்துல் தாக்கூரை ரூ. 10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி!

புவனேஷ்வர் குமார் புவனேஷ்வர் குமாரை ரூ. 4.2 கோடிக்கு மீண்டும் வாங்கியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி!

தீபக் சஹார் தீபக் சஹாரை ரூ. 14 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி

தினேஷ் கார்த்திக் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை வாங்க சிஎஸ்கே முயற்சித்த நிலையில், பெங்களூரு 5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்படவில்லை. அவரின் தொடக்க விலை 2 கோடி ரூபாயாக இருந்தது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!