ஹர்திக் பாண்ட்யாவின் செயல்களால் தமிழக வீரர்களுக்கு கடும் நெருக்கடி

ஹர்திக் பாண்ட்யாவின் செயல்களால் தமிழக வீரர்களுக்கு கடும் நெருக்கடி
X
குஜராத் அணியின் வெற்றியை விட, ஹர்திக் பாண்ட்யா களமிறங்கிய விதம், ஆடிய விதம் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குஜராத் அணியின் வெற்றியை விட, ஹர்திக் பாண்ட்யா களமிறங்கிய விதம், ஆடிய விதம் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.மும்பை: ஹர்திக் பாண்ட்யாவின் செயல்களால் தமிழக வீரர்களுக்கு கடும் நெருக்கடிகள் உருவாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 24 வது லீக் போட்டியில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போட்டியில் குஜராத் அணியின் வெற்றியை விட, ஹர்திக் பாண்ட்யா களமிறங்கிய விதம், ஆடிய விதம் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குஜராத் அணியில் ஓப்பனிங் வீரர்கள் மேத்யூவ் வேட் 12 ரன்களும், சுப்மன் கில் 13 ரன்களுக்கு அவுட்டாகினர். இதன் பின்னர் வந்த விஜய் சங்கர் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அணி சரிவை நோக்கி செல்வதை உணர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாப் ஆர்டரில் 2வது விக்கெட்டிற்கு களமிறங்கி ஆச்சரியம் தந்தார். அதற்கேற்றார் போலவே 52 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 87 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு காரணமானார்.

இந்நிலையில் இது தமிழக வீரர்களுக்கு தலைவலியை கொடுத்துள்ளது. அதாவது நடப்பு தொடரில் ஹர்திக் பாண்ட்யா அனைத்து போட்டிகளிலும் அசத்தி வருகிறார். இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 33(28), 31(27), 27(18), 50*(42), 87*(52) என குவித்துள்ளார். இதே போல பவுலிங், ஃபீல்டிங்கிலும் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்து வருகிறார்.


டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணித்தேர்வில் ஐபிஎல் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழக வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தான் முதன்மை ஆல்ரவுண்டர்களாக கருதப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது "மே ஐ கம்மின்" என்பது போல, பிசிசிஐ-க்கு கடும் நெருக்கடியை உருவாக்கிவிட்டுள்ளார்.

Next Story