பஞ்சாப் பேட்டர்களை சரித்து அதன் இன்னிங்ஸை விரைவாக முடித்த டெல்லி அணி

நேற்றைய ஐபிஎல்ஆட்டத்தில்பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பஞ்சாப் பேட்டர்களை சரித்து அதன் இன்னிங்ஸை விரைவாக முடித்த டெல்லி, தனது இன்னிங்ஸிலும் அதிரடி காட்டி வெற்றியை விரைந்து ருசித்தது. பஞ்சாப் 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுக்க, டெல்லி 10.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எட்டி வென்றது.
டாஸ் வென்ற டெல்லி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் பேட்டிங்கில் ஷிகர் தவன் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் அடித்து மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். லியம் லிவிங்ஸ்டன் 2, ஜானி பேர்ஸ்டோ 9 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த விக்கெட்டுகள் அனைத்துமே 4, 5, 6, 7-ஆவது ஓவர்களில் தலா 1 விக்கெட் வீதம் வீழ்ந்தன.
சற்று ரன்கள் சேர்த்த ஜிதேஷ் சர்மா 5 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் வந்த பேட்டர்கள் சொற்ப ரன்களில் வரிசையாக வெளியேற்றப்பட்டனர். டெல்லி பெüலிங்கில் கலீல் அகமது, லலித் யாதவ், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முஸ்டாஃபிஸுர் ரஹ்மான் 1 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் டெல்லி இன்னிங்ஸில் பிருத்வி ஷா அதிரடியாக ஆடி 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டு ஆட்டமிழந்தார். உடன் வந்த டேவிட் வார்னர் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 60 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினார். சர்ஃப்ராஸ் கான் 12 ரன்களுடன் துணை நின்றார். பஞ்சாப் தரப்பில் ராகுல் சஹர் 1 விக்கெட் எடுத்தார்.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அடித்த ஸ்கோர், இதுவரையிலான சீசன்களில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் கடந்த 2009-இல் மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 119 ரன்கள் அடித்ததே குறைவானதாக இருந்தது.
இன்றைய ஆட்டம்
மும்பை
சென்னை
இரவு 7.30 மணி ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu