/* */

ஐ.பி.எல். கிரிக்கெட் : கடைசி ஓவரில் பெங்களூரு அணி த்ரில்லிங் வெற்றி

சென்னையில் நேற்று துவங்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் பெங்களூரு அணி கடைசி ஓவரில் கடைசி பந்தில் ரன் எடுத்து திரிலிங் வெற்றியை பெற்றது. மும்பை அணி, முதல் லீக் போட்டியில் 9 வது முறையாக தோல்வியை தழுவியது

HIGHLIGHTS

14-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. பெங்களூரு அணி டாஸை வென்றது. பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் பேட்டிங்கை மும்பை அணி தொடங்கியது.

மும்பை அணியின் ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், கிறிஸ் லின்னும் களம் இறங்கினர். ரோகித் சர்மா 19 ரன்- எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். முதல் டவுனில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 31 ரன்னிலும், இஷான் கிஷன் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஓப்பனிங் பேட்ஸ் மேனாக இறங்கிய கிறிஸ் லின் 49 ரன்னில் ஆவுட் ஆனார். ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது . பெங்களூரு அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்..

அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 160 ரன்கள் எடுததால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி ஆடியது. கேப்டன் விராட் கோலியும், வாஷிங்டன் சுந்தரும் ஓப்பனிங் பேட்ஸ் மேன்களாக களம் இறங்கினர். 10 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரஜத் படிதர் 8 ரன்கள் எடுத்த நிலையில் போல்டு ஆனார்.

இதைத் தொடர்ந்து விராட் கோலியும், கிளைன் மேக்ஸ் வெல்லும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர். ஸ்கோர் 98 ரன்களை எட்டிய போது (12.3 ஓவர்) விராட் கோலி 33 ரன் எடுத்த நிலையில் பும்ராவின் பந்து வீச்சில் எல்.டபிள்யூ. ஆனார்.சிறிது நேரத்தில் மேஸ்வெல்லும் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் டிவில்லியர்ஸ் அதிரடி காட்டி அணியை நிமிர வைத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜேன்சன் வீசினார். இதில் முதல் 3 பந்தில் 4 ரன் எடுக்கப்பட்டது. 4-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓடிய போது டிவில்லியர்ஸ் 48 ரன் எடுத்த நிலையில்- அவுட் ஆனார்,

இதையடுத்து 2 பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில். 5-வது பந்தில் ஒரு ரன் வந்தது. தொடர்ந்து 6-வது பந்தில் ஹர்ஷல் பட்டேல் ஒரு ரன் எடுக்க பெங்களூரு அணி 'திரில்' வெற்றியை பெற்றது.பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On: 10 April 2021 8:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...