RCB vs RR ராஜஸ்தானை தோற்கடித்த பெங்களூரு! 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
துவக்க வீரர்களாக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாஃப் டூப்ளஸிஸ் இருவரும் களமிறங்கினர். முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார் விராட் கோலி. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பாப் டூப்ளஸிஸ் உடன் அடுத்தாக ஜோடி சேர்ந்தார் ஷபாஸ் அகமது. ஆனால் அவரும் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. 4 பந்துகளில் 2 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பெங்களூரு அணியின் அதிரடி நாயகன் மேக்ஸ்வெல் களமிறங்கினார்.
மேக்ஸ்வெல் மற்றும் பாஃப் இருவரும் இணைந்து ராஜஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கிவிட்டனர். வந்த பந்துகளை பவுண்டரி சிக்ஸர்களுக்கு விரட்டி ரசிகர்களுக்கு குதூகலம் அளித்தனர். பாஃப் 2 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் எடுத்தார். மேக்ஸ்வெல் 4 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளையும் அடித்தார்.
இவர்கள் அவுட் ஆன பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து மொத்தம் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தினேஷ் கார்த்திக் களத்தில் நிதான ஆட்டத்தைத் தொடர்ந்தார். மறுபுறம் வனிந்து ஹசரங்காவும் அவருக்கு துணை நின்றார்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.
ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் களமிறங்கினர். ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜோஸ் பட்லர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி ரசிகர்கள் மட்டுமின்றி அணி வீரர்களே கொஞ்சம் நம்பிக்கை இழந்தனர்.
ஆனால் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் அடித்து ஆடினர்.
யாஷஸ்வி 37 பந்துகளில் 47 ரன்களும் தேவ்தத் படிக்கல் 34 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து அவுட் ஆக, அதன் பின்னர் ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை இன்னமும் குறைந்து போனது. அடுத்து சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
ஷிம்ரன் ஹெட்மயர் 9 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களில் அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் ஜூரெல் போராடினார். அவருடன் அஸ்வினும் ரன்கள் எடுக்க உதவினார்.
கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல் பந்தில் பவுண்டரி அடித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். அடுத்து அவுட் ஆகி வெளியேறினார் அஸ்வின்.
கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
நேருக்கு நேர் RCB vs RR Head to Head
ஐபிஎல்லின் முந்தைய சந்திப்புகளில், RR மற்றும் RCB ஆகியவை ஒன்றுக்கொன்று எதிராக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மோதின. இந்த இரண்டு ராயல் அணிகளுக்கும் இடையே 28 மோதல்களில், பெங்களூரை தளமாகக் கொண்ட அணி 13 முறை வெற்றி பெற்றது. 12 ஆட்டங்கள் ராஜஸ்தானுக்கு சாதகமாக சென்ற நிலையில், 3 ஆட்டங்கள் கைவிடப்பட்டன.
Royal Challengers Bangalore
Virat Kohli(C), F du Plessis, SS Prabhudessai, MK Lomror, GJ Maxwell, Shahbaz Ahmed, DJ Willey, W Hasaranga, Dinesh Karthik(wk), Mohammed Siraj, Vijaykumar Vyshak
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விராட் கோலி(C), F du Plessis, SS பிரபுதேசாய், MK Lomror, GJ மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, DJ வில்லி, W ஹசரங்கா, தினேஷ் கார்த்திக்(wk), முகமது சிராஜ், விஜய்குமார் Vyshak
Rajasthan Royals
Yashasvi Jaiswal, Devdutt Padikkal, Shimron Hetmyer, Ravichandran Ashwin, Jason Holder, Jos Buttler, SV Samson(C), DC Jurel, Trent Boult, Yuzvendra Chahal, Sandeep Sharma
ராஜஸ்தான் ராயல்ஸ்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஜோஸ் பட்லர், எஸ்வி சாம்சன்(சி), டிசி ஜூரல், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் சர்மா
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu