ஐபிஎல் பார்க்க ஜியோ வச்ச ஆப்பு! ஆனா இப்படி பாக்க முடியும்!

ஐபிஎல் தொடரை இம்முறை ஒளிபரப்பும் உரிமையை ஜியோ சினிமா பெற்றுள்ளது. பல்வேறு வசதிகளையும் பல அம்சங்களையும் கொண்டு இலவசமாக பார்க்கும் வகையில் இந்த ஜியோ சினிமா ஆப்பில் பார்க்கும் வசதியைத் தருவதாக கூறப்பட்டாலும் அதற்கு 25ஜிபி டேட்டா தேவைப்படும் என்று குண்டைத் தூக்கி போட்டிருக்கிறார்கள்.
கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்ப்பது டிவியிலிருந்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மாறி இப்போது ஆப்பை திறந்தால் அதுவே காண்பிக்கும் என்பது வரை ஆகிவிட்டது. பாலுக்கு பால் ரிப்ளையுடன் டிவியில் பார்ப்பதை விட தரமான காட்சிகளை ஒளிபரப்பி ஆப் பக்கம் பலரையும் கவர்ந்து வருகின்றன நிறுவனங்கள்.
மேலும் வீட்டில் சீரியல் பார்ப்பவர்கள், நியூஸ் சேனல் பார்ப்பவர்களைக் கெஞ்சி கூத்தாடி கிரிக்கெட் சேனல் வைத்தால் அவர்களின் புலம்பல் வேறு நமக்கு எரிச்சலாக இருக்கும். முக்கியமான நாட்களில் பிரபலங்களின் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என போட்டு வீட்டில் சண்டைதான் நடக்கிறது. இதனால் கிரிக்கெட் பார்ப்பவர்கள் நைசாக ஆப் ஓபன் செய்து பார்த்துவிட்டு என்ஜாய் செய்கிறார்கள்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமத்தை விட ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமைக்குதான் அதிக ஏலம் போய், அதிக பணம் கிடைத்திருக்கிறது. அதை வாங்கியது ஜியோ சினிமாஸ்.
இதுவரை ஹாட்ஸ்டாரில் நாம் பார்த்து வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர், இனி அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜியோ சினிமாவில்தான் நாம் பார்க்கவிருக்கிறோம். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை இழந்த நிலையில் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்சனிலிருந்து 2 கோடி பேர் வெளியேறிவிட்டார்களாம்.
நீங்களே எந்த கோணத்தில் பந்தையும் பேட்டிங்கையும் பார்க்க வேண்டும் என தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனும் வசதியையும் தந்துள்ளது ஜியோ சினிமா. அதுவும் எந்த கட்டணமும் இல்லாமல் என அறிவிப்பு வெளிவந்துள்ளதால் இந்த ஆண்டு ஜியோ சினிமாஸ் சப்ஸ்கிரைப் செய்பவர்கள் கோடிக்கணக்கில் அதிகமாவார்கள்.
4கே தொழில்நுட்பத்தில தரமான கிரிக்கெட் காட்சிகளைக் காணவும் நேரலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை பார்க்க நாம் 25ஜிபி அளவுக்கு டேட்டாவை இழக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் நமது மொபைலின் தரமும் இதனை தீர்மானிக்கும்.
Full HD தரத்தில் பார்க்க முழு போட்டிக்கும் 12 ஜிபி டேட்டா செலவாகும், சாதாரண தரத்தில் பார்க்க 2 ஜிபி டேட்டா செலவாகும் என்கிறார்கள். இதனால் டிவியில் வாய்ப்பிருப்பவர்கள் அதிலேயே பார்த்துவிடலாம் என யோசித்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu