ஐபிஎல் 2023: முதல் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா அணி
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின
இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் , ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் டேவிட் வில்லே பந்துவீச்சில் வெங்கடேஷ் ஐயர் மூன்று ரன்களிலும் , மந்தீப் சிங் தான் எதிர்கொண்ட முதல் பந்திலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் நிதிஸ் ராணா 1 ரன்களில் வெளியேறினார்.
கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 47 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. மறுமுனையில் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடினார் . பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு விரட்டிய அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஆடிய அவர் 57 ரன்களில் கரண் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 46 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் வந்த ரசல் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்தஷர்துல் தாக்கூர் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.
வெற்றிபெற 205 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களுரு அணிக்கு கோலி மற்றும் டுப்லேசிஸ் நல்ல தொடக்கத்தை தந்தனர். 4.5 ஓவரின் இருவரும் 44 ரன்கள் குவித்த நிலையில், கோலி 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்த ஓவரிலேயே டுப்லேசிஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க பெங்களுரு அணிக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.
அடித்து ஆட முற்பட்ட மேக்ஸ்வெல் 5 ரன்களுக்கு நடையை கட்டினார், ஹர்ஷல் பட்டேல் 0 ரன்களுக்கு அவுட்டானார். வருண் சக்கரவர்த்தி தனது மூன்றாவது விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் வந்த ஷாபாஸ் அகமது 5 ரன்களின் ஆட்டமிழந்தார். 8.5 ஓவர்களில் பெங்களுரு அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அடித்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ப்ரேஸ்வெல் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க பெங்களுருவின் தோல்வி உறுதியானது. 48 பந்துகளில் 121 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற மோசமான நிலைக்கு பெங்களுரு அணி தள்ளப்பட்டது.
ஒரு ஓவருக்கு 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆடினர். ஆனால், அனுஜ் ராவத் 1 ரன் மட்டும் எடுத்த நிலையில் சுயாஸ் ஷர்மா பந்து வீச்சில் சுனில் நரைனிடன் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த இரண்டாவது பந்தில் தினேஷ் காரத்தில் 19 ரன்களில் வருண் சக்கரவர்த்தியுடன் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கரன் ஷர்மா ஒரு ரன்னில் நடையை கட்டினார்.
இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடித்து ஆடு என்ற மனநிலையில் களமிறங்கிய கடைசி ஆட்டக்காரர் ஆகாஷ் தீப் ஏழு பந்துகளில் ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். கடைசியில் வருண் சக்கரவர்த்தி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அத்துடன் பெங்களுரு அணியில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
முடிவில் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களுரு அணி மிக மோசமான தோல்வியை தழுவியது
சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுயேஷ் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியில் மூலம், கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
பெங்களுரு அணியின் மிகப்பெரிய இழப்பு வித்தியாசம் (ரன்கள் மூலம்)
140 ரன்கள் கே.கே.ஆர் எம். சின்னசாமி ஸ்டேடியம் , பெங்களூர் , இந்தியா 18 ஏப்ரல் 2008
118 ரன்கள் சண் ரைசர்ஸ், ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் , ஹைதராபாத் , இந்தியா 31 மார்ச் 2019
111 ரன்கள் பஞ்சாப் கிங்ஸ் ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் , தர்மஷாலா , இந்தியா 17 மே 2011
97 ரன்கள் பஞ்சாப் கிங்ஸ் துபாய் சர்வதேச அரங்கம் , துபாய் , யுஏஇ 24 செப்டம்பர் 2020
92 ரன்கள் சிஎஸ்கே செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானம் , போர்ட் எலிசபெத் , தென்னாப்பிரிக்கா 20 ஏப்ரல் 2009
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu