IPL 2023: பஞ்சாப்பை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்

IPL 2023: பஞ்சாப்பை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்
X
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதின.

டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், பிரப்சிம்ரன் சிங்கும் களமிறங்கினர், பிரப்சிம்ரன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டான நிலையில், தவானும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மேத்தீவ் 36 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 25 ரன்களும், ராஜபக்ச 20 ரன்களும், சாம் கரன் 22 ரன்களும், ஷாருக் கான் 22 ரன்களும், ரிஷி தவான் 1 ரன்னும் எடுத்து சீரான இடைவெளியில் வெளியேறினர். குஜராத்தின் சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முடியாமல் திணறினர்.

இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விருதிமான் சகா மற்றும் சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்த நிலையில் சகா 30 (19) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன் 19 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 40 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினார். டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

கடைசி ஒவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டநிலையில் சுப்மன் கில் 67 (49) ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். இறுதியில் குஜராத் அணி 19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்த வெற்றி பெற்றது.

முடிவில் ராகுல் தேவாட்டியா 5 (2) ரன்களும், டேவிட் மில்லர் 17 (18) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், ரபாடா, சாம் கரண் மற்றும் பேரர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய குஜராத் அணியில் மோஹித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!