GT VS CSK கடைசி போட்டியில் இப்படி ஒரு டுவிஸ்ட்! என்ன ஆச்சு தெரியுமா?

GT VS CSK கடைசி போட்டியில் இப்படி ஒரு டுவிஸ்ட்! என்ன ஆச்சு தெரியுமா?
X
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோதலான ஐபிஎல் 2023ன் கடைசி போட்டியில் இப்படி ஒரு டுவிஸ்ட்! என்ன ஆச்சு தெரியுமா?

ஐபிஎல் 2023 தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், அதில் மழை குறுக்கிட்டது. சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை பரிசளிக்கப்படும். இந்த போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பே மழை ஒரு 20-20 மேட்ச் ஆடி வரும் நிலையில், மழையின் காரணமாக ஏமாற்றமான முடிவை அடைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அப்செட் ஆகியிருக்கிறார்கள்.

இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் இன்று காலை முதலே மழை இருந்துள்ளது. டாஸ் போடும் நேரத்துக்கு சற்று முன்பு பெய்த கனமழையால் ஆடுகளம் ஈரமாகி, பின் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. இன்று மழை பெய்து போட்டி ரத்தாகி, நாளை ரிசர்வ் நாளிலும் மழை பெய்து போட்டி நடக்காமல் போனால் சென்னை அணியின் வெற்றி பறிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதற்கு காரணம் புள்ளிப்பட்டியலில் டாப்பில் இருக்கும் குஜராத் அணிக்கு போட்டியின்றி வெற்றி கோப்பை அளிக்கப்படும் என்கிறார்கள்.

ஐபிஎல் 2023 தொடரின் கடைசி நாள் இன்று. இறுதிப் போட்டி இன்றைய தினம் திட்டமிடப்பட்டிருந்தது. டாஸ் போடும் நேரம் மழை பிய்த்துக் கொண்டிருக்க, டாஸ் நேரம் மாற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து மழை பொழிந்துகொண்டே இருப்பதால் போட்டி துவங்கும் நேரம் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அகமதாபாத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இறுதிப் போட்டி 9.40 மணிக்கு துவங்கினால் எந்த ஓவர் குறைப்பும் இல்லாமல், 20 ஓவர்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருவேளை இந்த போட்டி அப்போது துவங்காமல் மழை தொடர்ந்து கொண்டிருந்தால் ஓவர்கள் அதற்கு ஏற்ப குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் மழை நிற்காமல் பெய்துகொண்டே இருந்த காரணத்தால் நாளை இந்த போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஐபிஎல் இறுதிப் போட்டியின் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டிருந்ததால், இன்றைய போட்டியை நாளை நடத்த திட்டமிட்டுள்ளது. நாளைய தினம் வழக்கம்போல இரவு 7 மணிக்கு டாஸ் போடப்படும். 7.30 மணிக்கு போட்டி துவங்கும்.

நாளைக்கும் அகமதாபாத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றாலும் இன்று போல அவ்வளவு பெரிய மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும், ஆட்டம் முழுமையாக நடைபெறும் எனவும் நம்பிக்கை அளித்திருக்கிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!