Chennai Super Kings அணி விளையாடும் போட்டிகள்! எந்த தேதியில் யாருடன் மோதுகிறது?

Chennai Super Kings அணி விளையாடும் போட்டிகள்! எந்த தேதியில் யாருடன் மோதுகிறது?
X
ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்த்து விளையாடும் அணிகளையும், எந்தெந்த நாள்களில் யாருடன் விளையாடுகிறது என்பதையும் இந்த பதிவில் காண்போம்.

கண்ணை மூடித் திறப்பதற்குள் இந்த ஆண்டின் இரண்டு மாதங்கள் கடகடவென கடந்து சென்றுவிட்டன. கடந்த ஆண்டு டிசம்பரில் ஒருநாள் தொடரை இழந்தாலும், டெஸ்ட்டில் வங்கதேசத்தை துவைத்து எடுத்த இந்திய அணி இந்த ஆண்டின் துவக்கத்திலேயே இலங்கை அணியை மல்லுகட்ட அழைத்தது. 2 - 1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்று, ஒருநாள் தொடரில் மொத்தமாக சுருட்டியது. அடுத்து நியூசிலாந்துடனும் ஒருநாள் தொடரை மொத்தமாக கைப்பற்றி வீட்டுக்கு அனுப்பியது இந்திய அணி.

அதன் பின்னர் இந்திய சுற்றுப்பயணத்துக்கு வந்த ஆஸ்திரேலிய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடியிருக்கிறது கடைசி போட்டி நாளைத் துவங்குகிறது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் இருக்கிறது. 22 மார்ச்சுடன் முடிவுக்கு வரும் இந்த தொடருக்குப் பிறகு சில நாட்கள் ஓய்வு கிடைக்கிறது.

வரும் மார்ச் 31ம் தேதி போர் தொடங்க இருக்கிறது. ஐபிஎல் போர், இந்த முறையும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த நாட்களில் எந்தெந்த அணியுடன் விளையாடப் போகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நாள் : March 31, Friday:

ஆட்டம் : Gujarat Titans vs Chennai Super Kings

இடம் : Narendra Modi Stadium in Ahmedabad

நேரம் : 7:30PM IST


நாள் : April 3, Monday:

ஆட்டம் : Chennai Super Kings vs Lucknow Super Giants

இடம் : MA Chidambaram Stadium in Chennai

நேரம் : 7:30PM IST


நாள் : April 8, Saturday:

ஆட்டம் : Mumbai Indians vs Chennai Super Kings

இடம் : Wankhede Stadium in Mumbai

நேரம் : 7:30PM IST


நாள் : April 12, Wednesday:

ஆட்டம் : Chennai Super Kings vs Rajasthan Royals

இடம் : MA Chidambaram Stadium in Chennai

நேரம் : 7:30PM IST


நாள் : April 17, Monday:

ஆட்டம் : Royal Challengers Bangalore vs Chennai Super Kings

இடம் : M Chinnaswamy Stadium in Bengaluru

நேரம் : 7:30PM IST


நாள் : April 21, Friday:

ஆட்டம் : Chennai Super Kings vs Sunrisers Hyderabad

இடம் : MA Chidambaram Stadium in Chennai

நேரம் : 7:30PM IST


நாள் : April 23, Sunday:

ஆட்டம் : Kolkata Knight Riders vs Chennai Super Kings

இடம் : Eden Gardens in Kolkata

நேரம் : 7:30PM IST


நாள் : April 27, Thursday:

ஆட்டம் : Rajasthan Royals vs Chennai Super Kings

இடம் : Sawai Mansingh Stadium in Jaipur

நேரம் : 7:30PM IST


நாள் : April 30, Sunday:

ஆட்டம் : Chennai Super Kings vs Punjab Kings

இடம் : MA Chidambaram Stadium in Chennai

நேரம் : 3:30PM IST


நாள் : May 4, Thursday:

ஆட்டம் : Lucknow Super Giants vs Chennai Super Kings

இடம் : Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium in Lucknow

நேரம் : 3:30PM IST


நாள் : May 6, Saturday:

ஆட்டம் : Chennai Super Kings vs Mumbai Indians

இடம் : MA Chidambaram Stadium in Chennai

நேரம் : 3:30PM IST


நாள் : May 10, Wednesday:

ஆட்டம் : Chennai Super Kings vs Delhi Capitals

இடம் : MA Chidambaram Stadium in Chennai

நேரம் : 7:30PM IST


நாள் : May 14, Sunday:

ஆட்டம் : Chennai Super Kings vs Kolkata Knight Riders

இடம் : MA Chidambaram Stadium, Chennai

நேரம் : 7:30PM IST


நாள் : May 20, Saturday:

ஆட்டம் : Delhi Capitals vs Chennai Super Kings

இடம் : Arun Jaitley Stadium in Delhi

நேரம் : 3:30PM IST


கோப்பையை வெல்லுமா சிஎஸ்கே அணி?

ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான அணிகளுள் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஒரு சில சீசன்கள் தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் வெளுத்து வாங்கியுள்ள சிஎஸ்கே, இதுவரை நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2010, 2011, 2018, 2021 ஆண்டுகளில் தோனி தலைமையில் கோப்பைகளை கைப்பற்றியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பட்டியல்

MS Dhoni, Ravindra Jadeja, Devon Conway, Ruturaj Gaikwad, Ambஇடம் :i Rayudu, Subhranshu Senapஇடம் :i, Moeen Ali, Shivam Dube, Rajvardhan Hangargekar, Dwaine Pretorius, Mitchell Santner, Deepak Chahar, Tushar Deshpande, Mukesh Choudhary, Mஇடம் :heesha Pஇடம் :hirana, Simarjeet Singh, Prashant Solanki, Maheesh Theekshana, Ajinkya Rahane, Ben Stokes, Shaik Rasheed, Nishant Sindhu, Kyle Jamieson, Ajay Mandal, Bhagஇடம் :h Varma

எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சிம்மத் சௌத்ரி, முகேஷ் சிம்மத் சௌத்ரி, , மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா

Tags

Next Story