ஐபிஎல் 2022: கடைசி லீக் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி
பஞ்சாப் அணி வீரர் லியாம் லிவிங்ஸ்டன்
ஐபிஎல் 15-வது சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே குஜராத், லக்னோ, ராஜஸ்தான் , பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இந்த நிலையில் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின
டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக பிரியம் கார்க், அபிஷேக் சர்மா களமிறங்கினர். 4 ரன்கள் எடுத்த நிலையில் பிரியம் கார்க், ரபாடா பந்துவீச்சில் கேப்டன் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து ராகுல் திரிபாதி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து பஞ்சாப் அணி ஐதராபாத் அணி சரிவை நோக்கி சென்றது. பூரன் 5 ரன்களிலும் மார்க்ரம் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி 5 ஓவரில் வாஷிங்டன் சுந்தர் - ரொமாரியோ ஷெப்பர்ட் ஜோடி அதிரடி காட்டினர். வாஷிங்டன் சுந்தர் 19 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹர்ப்ரீத் பிரார் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பேர்ஸ்டோவ் 15 பந்துகளில் 23 ரன்களும், ஷாருக்கான் 19, கேப்டன் அகர்வால் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். ஷிகர் தவான் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன் பிறகு லியாம் லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இறுதியில் பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. இதன் மூலம் அந்த அணி புள்ளிபட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியது. சன் ரைசர்ஸ் அணி 8வது இடத்தைப் பிடித்தது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu