ஐபிஎல்லின் 1000வது போட்டி! ராஜஸ்தானை வீழ்த்துமா மும்பை!

ஐபிஎல்லின் 1000வது போட்டி! ராஜஸ்தானை வீழ்த்துமா மும்பை!
X
7 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான் அணி. இதுதான் ஐபிஎல் தொடர்களின் ஆயிரமாவது போட்டியாக அமையவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் மும்பைக்கும் ராஜஸ்தானுக்கும் நேருக்கு நேர் என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கலாம்.

ஐபிஎல் தொடர்களின் 1000வது போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஞாயிறு டபுள்ஸின் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோத இருக்கிறது.

ஐபிஎல் தொடரின் 2023 சீசன் கடந்த மாதம் துவங்கி நடந்து வருகிறது. ஒரு மாத காலமாக நடந்து வரும் இந்த போட்டியில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ, சென்னை உள்ளிட்ட அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. குஜராத் அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும் மற்ற 3 அணிகளும் 5 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

இந்த சீசனின் 42 வது போட்டி இன்று நடைபெற இருக்கும் மும்பை அணிக்கு எதிராக ராஜஸ்தான் மோதும் போட்டி. இது ஒட்டுமொத்த ஐபிஎல் தொடர்களின் 1000 வது போட்டியாகும். இதுவரை நடந்த போட்டிகளின் எண்ணிக்கை 999 ஆகும். இப்போது சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு வருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இதற்கு அடுத்தபடியாக 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான் அணி. இதுதான் ஐபிஎல் தொடர்களின் ஆயிரமாவது போட்டியாக அமையவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் மும்பைக்கும் ராஜஸ்தானுக்கும் நேருக்கு நேர் என்ன நடந்திருக்கிறது என்று பார்க்கலாம்.

ஐபிஎல் 2023 மும்பை

இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பெற்றிருக்கிறது மும்பை அணி. தனது 4 வது வெற்றியைப் பெற மும்முரமாக தயாராகி வருகிறது அந்த அணி.

ஐபிஎல் 2023 ராஜஸ்தான்

8 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 5 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பெற்றிருக்கிறது. அடுத்து இன்றைய போட்டியிலும் வென்று தனது நிலையை புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறது ராஜஸ்தான் அணி.

ருத்ரதாண்டவமாடத் தயாராகும் பட்லர்

இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் தனது ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜோஸ் பட்லர், மும்பைக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவர் மும்பை பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இம்முறை அர்ஜூன் டெண்டுல்கர், மெரிடித், பியூஷ் சாவ்லா, பெரண்டாஃப் உள்ளிட்டோரின் தாக்குதலை எப்படி எதிர்கொண்டு தனது ஃபார்மைத் தொடர இருக்கிறார் பட்லர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாஃர்மில்லாமல் தவிக்கும் SKY

சூர்ய குமார் யாதவ் மும்பை அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மென். ஆனால் இந்த சீசனில் அவருக்கு டச் இல்லாததால் ஃபார்ம் அவுட் ஆகி தவிக்கிறார். பெரிய அளவில் எந்த மேட்சும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், இந்த ஆட்டத்தில் எப்படி விளையாடப் போகிறார் என எதிர்பார்த்து வருகின்றனர்.

வெறிகொண்ட ராஜஸ்தான் வீரர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜெய்ஸ்வால், பட்லர், சாம்சன், ஹெட்மயர், படிக்கல், துருவ் என வரிசையாக அனைவரும் வெளுத்து வாங்குகிறார்கள். பவுலிங்கில் சாஹல், அஸ்வின், போல்ட், சந்தீப் சர்மா, ஹோல்டர் என மிரட்டி வருகிறார்கள்.

நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 12 போட்டிகளிலும், மும்பை அணி 14 போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ளன.

சர்ப்ரைஸ் கொண்டாட்டம்

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். அதன்படி பிசிசிஐ ஒரு மொமண்டோ கொடுக்க திட்டமிட்டுள்ளதாம். மேலும் மூன்று கொடிகளையும் பிடித்து வீரர்கள் மைதானத்துக்குள் நுழைவார்கள் என்று கூறப்படுகிறது. அதில் ஐபிஎல் கொடி, நன்றி பதாகை, இந்திய தேசிய மூவர்ண கொடி ஆகியவை அடங்கும். கடைசியாக மொமண்ட்டோ ரோஹித் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் கையில் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story