ஈட்டி எறிதல்: 2வது முறையாக தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா
இந்த சீசனுக்கான லொசேன் டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லொசான் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். காயத்தால் ஒரு மாதங்கள் ஓய்வில் இருந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், 2வது முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. 87.66 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெற்றி பெற்றார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 2-வது இடமும், செக் குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் 3-வது இடமும் பிடித்தார்.
இதன்மூலம் டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்தார். நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு இதே தொடரில், 88.44 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது முதல் மற்றும் நான்காவது முயற்சியில் தடுமாறி ஐந்தாவது முயற்சியில் அதை பெரிதாக்கினார், அது அவருக்கு முதலிடத்தைப் பிடிக்க உதவியது.
லொசேன் டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா முதலிடத்தைப் பெற்றாலும், முரளி ஸ்ரீசங்கர் போடியம் ஃபினிஷிங்கைப் பெறத் தவறி 5வது இடத்தைப் பிடித்தார்.
முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜாகுப் வாட்லெஜ் (செக் குடியரசு), உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கேஷோர்ன் வால்காட் (டிரினிடாட் அண்ட் டொபாக்கோ), ஜூலியன் வெப்பர் (ஜெர்மனி) ஆகிய முன்னணி வீரர்களும் இப்போட்டியில் பங்கேற்றிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu