ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி

டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
உலகக்கோப்பை போட்டி முடிவை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதியது. இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை எளிதாக கைப்பற்றி விடும் என எதிர்பார்த்த நிலையில் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தால் மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக அன்று தொடரை கைப்பற்ற முடியவில்லை.
இந்த நிலையில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெற்றது. இந்திய அணி முதலில் பந்தடித்து 174 ரன்கள் எடுத்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் களம் இறங்கினார்கள்.
ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் தான் எடுத்தனர். இதன் காரணமாக இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இளம் வீரர்கள் சாதனை படைத்துள்ளார்கள். அவர்களுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றியை நழுவ விட்ட இந்திய அணி வீரர்களுக்கு இந்த வெற்றி ஓரளவு மகிழ்ச்சியை தந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu