3 ஆவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி... நியூஸிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி...
நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதால் சம்பிரதாய போட்டியாகவே இது கருதப்பட்டது. இந்திய அணியில், இரண்டு மாற்றங்கள் செய்யபப்பட்டிருந்தன. வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதற்கு பதிலாக உம்ரன் மாலிக், சஹல் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர்.
டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லோதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்பன் கில் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறச் செய்தனர். அணியின் ஸ்கோர் 212 ஆக இருந்தபோது ரோகித் சர்மா தனது விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் 85 பந்துக்கஶிஸ் 101 ரன்களை குவித்தார் . தில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும்.
சிறப்பாக விளையாடி சதம் அடித்த சுப்மன் கில் 112 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 78 பந்துகளை சந்தித்து அபாரமாக அடி 112 ரன்கள் குவித்தார். அதில் 5 சிக்ஸர்கள் 13 பவுண்டரிகள் அடங்கும். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 36 ரன்களிலும், இஷான் கிஸன் 17 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஹார்த்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அதில் மூன்று சிக்ஸர் 3 பவுண்டடிகள் அடங்கும். வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களிலும், ஷர்துல் தாக்கூர் 25 ரங்களிலும், குல்தீப் யாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிருந்தனர்.
இந்திய அணியை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டபி, டிக்னர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் கனவை தொடக்கத்திலேயே கலைத்தார் ஹார்த்திக் பாண்டியா.
அந்த அணியின் தொடக்க வீரரான பின் ஆலன் இரண்டு பந்துக்களை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான டெவன் கான்வே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 100 பந்துகளை சந்தித்து 138 ரன்களை குவித்தார். அதில் 8 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். நியூஸிலாந்து அணியின் ஹென்றி நிக்கோலஸ் 40 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
டேரியல் மிட்சேல் 24 ரன்களிலும், கேப்டன் டாம் லோதம் ரன் ஏதும் எடுக்காமலும், பிலிப்ஸ் 5 ரன்களிலும், பிளாக்வெல் 26 ரன்களிலும், சாண்ட்னர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெர்குலசன் 7 ரன்களிலும், டபி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். சஹல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி இந்திய அணி நியூஸிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu