இந்திய கிரிக்கெட் அணி மும்பை பயணம்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி, இன்று மும்பையில் இருந்து, ஆஸ்திரேலியா புறப்பட்டது.
Today Cricket News in Tamil -ஆஸ்திரேலியாவில், 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி, அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்நிலையில் டி-20 உலக கோப்பையில் பங்கேற்க செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல். சூர்ய குமார் யாதவ் உட்பட பேட்ஸ்மன்களும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் போன்ற பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று ( 6-ம் தேதி) ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. அங்கு பெர்த் மைதானத்தில் 13-ம்தேதி வரை இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது. இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாலர் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணி இன்னும் மாற்று வீரரை அற்விக்கவில்லை. அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பையில் பங்கேற்க இந்திய அணி இன்று மும்மையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
டி20 உலககோப்பை – பரிசுத்தொகை
இந்நிலையில், டி-20 உலக கோப்பையை வெல்லும் அணி பெறும் பரிசுத் தொகை குறித்து, ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி சாம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 13,04,90,640) பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படுகிறது.
இந்த தொடரில் வெற்றியைப் பதிவு செய்யும் அணிகளுக்கு 40 ஆயிரம் டாலரும், சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலரும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடரின் மொத்த பரிசுத் தொகை 5.6 மில்லியன் (இந்திய பண மதிப்பில் ரூ. 45,67,17,240) ஆகும்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி
டி20 உலககோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் போட்டியில் வருகிற 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. வழக்கம் போல் இந்த போட்டிக்கு இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu