டி 20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிப்பு

டி 20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிப்பு
X

கேப்டன் ரோகித் சர்மா.

டி 20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு குறித்து இன்று அஜித் அகார்க்கர் தலைமையில் இந்திய அணி தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். அதன்படி, தற்போது டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்)விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ்.

தமிழக வீரர்கள் ஒருவர் கூட இந்திய அணியில் இடம்பெறவில்லை. கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்படவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். விபத்தில் சிக்கி நீண்ட காலம் அணியில் இடம்பெறாமல் இருந்த ரிஷப் பந்த் அணியில் இடம் பெற்றுள்ளார். யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

தற்போது இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் இதனை தினமும் பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் உலக கோப்பை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!