உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி அறிவிப்பு

வருகிற ஜூன் 18-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, அஜிங்கியா ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா. இஷாந்த் ஷர்மா. முகமது ஷமி, சிராஜ். உமேஷ் யாதவ்
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், மயாங்க் அகர்வால், ஷர்துல் தாகூர், கே எல் ராகுல், அக்சர் பட்டேல் ஆகிய ஐந்து வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் இன்னிங்ஸை தொடங்க உள்ளது உறுதியாகியுள்ளது.
சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருமே அணியில் இடம் பெற்றுள்ளது தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu