இலங்கைக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி.. தொடரை கைப்பற்றியது...

இலங்கைக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி.. தொடரை கைப்பற்றியது...
X

இந்திய அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த கே.எல். ராகுல்- ஹார்திக் பாண்டியா ஜோடி.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று டி-20 தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அஸாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக அவிக்சா பெர்னான்டோ, நுவைந்து பெர்னாடோ ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஓரளவு நிலைத்து ஆடிய நிலையில், அணியின் ஸ்கோர் 29 ஆக இருந்தபோது 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவிக்சா பெர்னாண்டோ ஆட்டம் இழந்தார்.


தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய தனஞ்செயா டி சில்வா ரன் ஏகும் எடுக்காமல் அக்ஸா படேல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

ஓரளவு நிலைத்தாடிய நுவைந்து பெர்னாண்டோ அரை சதம் அடித்தார். அவர் 63 பகுதிகளில் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுப்மன் கில்லால் ரன் அவுட் செய்யப்பட்டார். அதன் பிறகு களம் இறங்கிய இலங்கை வீரர்கள் சொற்பரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் தசுன் சனகா 2 ரன்களிலும், கசரங்கா 21 ரன்களிலும், வெலலலேகே 32 ரன்களிலும், கருணரத்னே 17 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர் .

இலங்கை அணி 39.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து, 216 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இருப்பினும் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா 17 ரன்களிலும்ஸ சுப்மன் கில் 21 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த விராட் கோலி நான்கு ரன்களில் ஆட்டம் இழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் ஓரளவு தாக்குப்பிடித்து 28 ரன்கள் அடித்தார். ஹார்த்திக் பாண்டியா 36 ரன்களில் ஆட்டம் இழந்தார்.


ஆல்ரவுண்டர் அக்ஸார் படேல் 21 எண்களில் ஆட்டம் இழந்தார். கே எல் ராகுல் ஓரளவு நினைத்தாடி அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 64 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 43.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றி மூலம் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.

இன்னும் ஒரு நாள் போட்டி மீதம் உள்ளது. தொடரை கைப்பற்றியதால் அந்த போட்டி சம்பிரதாய போட்டியாகவே அமையும். மூன்றாவது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டி ஜனவரி 15 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil