ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடரை வென்றது இந்திய அணி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்து உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடரை வென்றது இந்திய அணி
X

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும், சூர்யகுமார் 72 ரன்களும், கேஎல் ராகுல் 52 ரன்களும் குவித்தனர்.

பின்னர் மழை நின்ற நிலையில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. 1 மணி நேரத்திற்கு மேல் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டு 33 ஓவரில் 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் ஆஸ்திரேலியா அணி 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக சென் அப்பாட் 54 ரன்களும், டேவிட் வார்னர் 53 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் (டி.எல்.எஸ் முறை) இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தி இருக்கிறது.

Updated On: 25 Sep 2023 8:55 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
  2. வணிகம்
    Business News In Tamil 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ...
  3. திண்டுக்கல்
    நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  4. தமிழ்நாடு
    மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு
  5. சினிமா
    Thalapathy 68 Songs மொத்தம் எத்தனை தெரியுமா?
  6. ஆலங்குடி
    குடிநீர் வழங்காததைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகராட்சி சார்பில் சென்னைக்கு ரூ.13 லட்சம் நிவாரண...
  8. புதுக்கோட்டை
    ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மனுக்கொடுக்கும் போராட்டம்.
  9. சோழவந்தான்
    மதுரையில் டெங்கு தடுப்பு பணி குறித்து மேயர் ஆய்வு
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆணையர், கவுன்சிலர்கள்...