Ind Vs SA T20 Series : தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கட்டாக்கில் நடந்த 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இன்று நடந்தது . இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாகும். ஏனெனில் இதில் தோற்றால் இந்திய அணி தொடரை இழந்து விடும். இந்த இக்கட்டான சூழலில் இந்திய அணி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் . தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் கெய்க்வாட் 57 ரனிலும், கிஷன் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஸ்ரேயஸ் அய்யர் 14 ரன்னிலும், கேப்டன் ரிஷப் பண்ட் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஹர்திக் பாண்ட்யா ஒருசில பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுக்க, இந்திய அணி இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் . தொடக்க வீரர்கள் பவுமா 8 ரன்களுக்கும் ,ஹென்ரிக்ஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர் .
அடுத்து வந்த வெண்டர் டசன் 1 ரன்களிலும் பிரிட்டோரியஸ் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் . இதனால் தென் ஆப்பிரிக்கா அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை.
றுதியில் தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .இந்தியா அணியில் சிறப்பாக பந்துவீசிய ஹர்சல் படேல் 4 விக்கெட்டும் சாஹல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர் இதனால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu