ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி: மேலும் ஒரு வெண்கல பதக்கம்
வெண்கல பதக்கம் பெற்ற மகிழ்ச்சியில் இந்திய ஹாக்கி அணி வீரர்கள்.
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா ஸ்பெயின் நாட்டை வீழ்த்தி வெண்கல பதக்கம் பெற்று உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பதக்க பட்டியலில் முதல் பத்து இடத்திற்குள் உள்ளன. அந்த நாடுகளின் சார்பில் விளையாடும் வீரர் வீராங்கனைகள் தங்கம் ,வெள்ளி என பதக்கங்களை அள்ளி குவித்து வருகிறார்கள்.
ஆனால் இந்தியா பதக்க பட்டியலில் இதுவரை 3 பெண்கல பதக்கங்களுடன் நாற்பதாவது இடத்திற்குமேல் தான் உள்ளது. இவ்வளவு பின்தங்கி இருப்பதற்கு தங்க பதக்கம் எதுவும் இந்திய அணி பெறாதது தான் காரணம் ஆகும். பெண்கள் மல்யுத்த போட்டியில் தங்க பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகட் உடல் எடை பிரச்சினை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஒலிம்பிக் கமிட்டியின் இந்த முடிவு ஒவ்வொரு இந்திய குடிமகனையும் வேததனையில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் தான் இன்று ஹாக்கி இறுதி போட்டியில் இந்திய அணியும் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியும் மோதின. இதில் இந்திய அணி 2- 1 கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி வெண்கல பதக்கம் பெற்றது.
ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் பெற்று இருப்பதன் மூலம் இந்திய அணி நான்காவது வெண்கல பதக்கத்தை ருசித்து உள்ளது. ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு. நமது தேசிய விளையாட்டான ஹாக்கியில் நமது வீரர்கள் பதக்கம் பெற்று கொடுத்து இருப்பது ஒவ்வொரு இந்தியனையும் பெருமை கொள்ள செய்து இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu