3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியா அபார வெற்றி தொடரை கைப்பற்றியது
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வந்தது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கிலும் 5 போட்டி கொண்ட டி20 தொடரை 3 -- 2 என்ற கணக்கிலும் கைப்பற்றியது இந்திய அணி.
இந்த நிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்போட்டியில் விளையாடியது.
இதில் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் அணி வெற்றிப் பெற்றது. 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 1-1 என்று சமநிலையில் இருந்தது.
ஒருநாள் தொடரை யார் கைப்பற்றுவது என்பதற்கான கடைசி ஒருநாள் போட்டி நேற்று புனேவில் பகல், இரவு ஆட்டமாக நடைபெற்றது.இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் போட்டிங் செய்த இந்திய அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களை குவித்தது.
இந்திய அணியில் அதிபட்சமாக ரிஷப் பண்ட் 78 ரன்களை எடுத்தார். ஷிகர்தவான் 67 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களையும், ரோஹித் சர்மா 37 ரன்களையும், ஷர்துல்தாகூர் 30 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து பந்து வீச்சாளர் மார்க்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பேட்டிங் செய்தது. புவனேஷ்குமாரின் அசத்தலான ஓவரால் ஓப்பனிங் பேட்ஸ் மேன்களான ஜேசன் ராய் 14 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோ ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் ஸ்டோக் நட்டு நடராஜன் பத்துவீச்சில் ஆவுட்டானார். ஷர்துல் தாகூர் ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
168 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்ததால் இங்கிலாந்து அணி தடுமாறியது. அதன்பின்னர் விக்கெட்டை காப்பாற்ற சாம் கர்ரன் கடுமையாக போராடினார். நெருக்கடிக்கு மத்தியிலும் அரை சதம் கடந்த அவர் சதத்தை நெருங்கினார். மறுமுனையில் மொயீன் அலி 29 ரன்களிலும், அடில் ரஷித் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரை நட்டு நடராஜன் வீசினார். யார்க்கராக வீசிய முதல் பந்தில் சாம் கர்ரன் ஒரு ரன் எடுத்தார். ஆனால் இரண்டாவது ரன் எடுக்கும் முயற்சியின்போது, மார்க் வுட் ரன் அவுட் ஆனார்.
இரண்டாவது பந்தை எதிர்கொண்ட டோப்லே ஒரு ரன் எடுத்தார். அடுத்த 2 பந்துகளை தவறவிட்ட சாம் கர்ரன், 5வது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ரன் எடுக்கவில்லை. 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 322 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. கடைசி வரை போராடிய சாம் கர்ரன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், 3 போட்டி கொண்ட தொடரையும் 2 - 1 என கைப்பற்றியது அசத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu