india vs zimbabwe first odi match-முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய துவக்க ஆட்டக்காரர்களே போட்டியை முடித்து வெற்றி..!

இந்தியா- ஜிம்பாப்வே அணிகளுக்கான 3 ஒரு நாள்போட்டிதொடருக்கான கோப்பையை இரு அணி கேப்டன்களும் அறிமுகம்செய்தனர்.
ஹராரே:
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியானது அபார வெற்றி பெற்றது.190 அணி இலக்கினை விக்கெட் ஏதும் இழக்காமல் வென்று இந்திய அணி சாதனை படைத்தது.
இந்திய அணி வீரர்கள் பட்டியல்:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர்.
ஜிம்பாப்வே அணி:
ரியான் பர்ல், ரெஜிஸ் சகாப்வா (கேப்டன்), தனகா சிவாங்கா, பிராட்லி எவன்ஸ், லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, கிளைவ் மடண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே என்சரா, டோனிசரா நகர்வானி, ஜான்னிசரா நகர்வானி, சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, டொனால்ட் டிரிபானோ.
ஜிம்பாப்வே மண்ணில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியானது 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டியானது நேற்று ஹராரேவில் நடந்தது. பகல் இரவுஆட்டமாக நடந்தது.டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஜிம்பாப்வே அணியானது முதலில் பேட்டிங்செய்தது. ஜிம்பாப்வே அணியின் துவக்க ஆட்டக்காரர்களும்,மிடில் ஆர்ட்ர் பேட்ஸ்மேன்களும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அவுட்டாகி ஒற்றை இலக்க எண்களில் பெவிலியனுக்குதிரும்பினர்.
ஜிம்பாப்வே அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சகப்வா 35 ரன்களும், ரிச்சர்டு என்கிராவா 34 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 190 ரன்கள் ஆக நிர்ணயிக்கப்பட்டது.
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குறிவைத்து இந்திய அணி அபாரமாக தனது ஆட்டத்தினை துவக்கியது.இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், சுப்மன் கில் இருவரும் துவக்கம் முதலே நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இரண்டு பேரின் விக்கெட்டையும் வீ்ழ்த்த ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர்கள் எடுத்த முயற்சி அனைத்துமே வீணாகிப்போனது.
10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்திய அணி ஒரு விக்கெட்கூட இழக்காமல் 30.5 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷிகர் தவன் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து முதல் போட்டியில் சாதனை படைத்தனர். முதல் போட்டியில் இந்திய அணி 1-0 வென்றுள்ளது. இதே மைதானத்தில் இரண்டாவது போட்டியானது நாளை சனிக்கிழமை நடக்க உள்ளது. வெற்றி பெற போவது யாரு? .இந்திய அணி நாளையும் வென்றால் தொடரை வென்றது ஆகிவிடும். பொறுத்திருந்து பார்ப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu