/* */

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் கண்டுகளிப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் கண்டு ரசித்தனர்.

HIGHLIGHTS

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் கண்டுகளிப்பு
X

டெஸ்ட் கிரிக்கெட் துவங்கும் முன் வீரர்களுடன் இரு நாட்டு பிரதமர்கள். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றன. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனியுடன் பிரதமர் மோடி இணைந்து பார்த்து வருகிறார்.

அவரது வருகையையொட்டி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்களை கேப்டன் ரோகித் சர்மா பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்தார். பிரதமர் மோடி வீரர்களுக்கு கைகொடுத்து உற்சாகப்படுத்தினார். ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு பிரதமர் ஆண்டனி கைகொடுத்து உற்சாகப்படுத்தினார்.

இதையடுத்து இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து தற்போது ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Updated On: 9 March 2023 1:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணும் பணிக்கான நடைமுறைகள்: கலெக்டர் தலைமையில் ஆலோசனை
  3. காஞ்சிபுரம்
    ஸ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  4. ஈரோடு
    கோபியில் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்: மாட்டு வண்டி ஊர்வலத்துடன்...
  5. வீடியோ
    ஆட்டம் தமிழகத்திலிருந்து ஆரம்பம் | Annamalai-க்கு Amitshah ஆர்டர் |...
  6. ஆன்மீகம்
    உப்புத் தண்ணீரை மூதாட்டிமேல் கொட்டச் சொன்ன மகாபெரியவர்!
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் மாம்பழம் சாப்பிடலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குளித்த பிறகு தலை முடியை துவட்டாமல் விடுபவரா நீங்கள்?
  9. கோவை மாநகர்
    தண்ணீர் தொட்டிக்குள் மின்சாரம் தாக்கி இருவர் பலி
  10. தொழில்நுட்பம்
    ரியல்மி 13 ப்ரோ என்ன விலை?