/* */

சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி! ஓபன் பண்ணதும் காலியான டிக்கெட்டுகள்...!

India VS Australia ODI Tickets-சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி! ஓபன் பண்ணதும் காலியான டிக்கெட்டுகள்...!

HIGHLIGHTS

சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி! ஓபன் பண்ணதும் காலியான டிக்கெட்டுகள்...!
X

India VS Australia ODI Tickets-சென்னையில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இருந்தாலும் கிரிக்கெட் பார்க்க விரும்புபவர்களுக்கு டிக்கெட் பெற இன்னொரு வழிமுறை இருக்கிறது. அது எப்படி என்பதையும் கிரிக்கெட் போட்டி குறித்த சுவாரஸ்யமான சில விசயங்களையும் இந்த பதிவில் காண்போம்.

டிக்கெட் வாங்க போட்டா போட்டி போட்டு அனைத்து டிக்கெட்டுகளையும் காலியாக்கி விட்டனர் கிரிக்கெட் ரசிகர்கள். சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது தெரியவந்ததும் டிக்கெட் விற்பனை நாளை குறித்து எதிர்நோக்கி இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில், ஆன்லைனில் டிக்கெட் விற்பனைத் துவங்குவதாக அறிவிக்கப்பட்டதும் போட்டி போட்டி பலரும் டிக்கெட் வாங்கியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளும் ஒருநாள் தொடரில் 3 போட்டிகளும் இருக்கின்றன.

டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளை வென்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதன் பிறகு ஒருநாள் தொடர் துவங்க இருக்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி தொடங்கி நடக்கவிருக்கிறது. இதில் 3வது போட்டி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை முதலில் ஆன்லைனிலும் பின்னர் நேரிலும் விற்கப்படுவது அறிவிக்கப்பட்டது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனை துவங்கிய சில மணி நேரத்தில் 1500 ரூ, 3000 ரூ டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இதனைத் தொடர்ந்து 5000 ரூ, 6000 ரூ, 8000 ரூ, 10 ஆயிரம் ரூபாய் டிக்கெட்டுகள் என ஒவ்வொன்றாக விற்று தீரவே கடும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது. டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு நல்வாய்ப்பாக நேரடியாக சென்று வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. கால் கிடக்க காத்துக்கிடக்க வருத்தப்படாதவர்களுக்கு இந்த டிக்கெட் விற்பனை நல்லவிசயமாக இருக்கும்.

வரும் 18ம் தேதி காலை 11 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் குறைந்த விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 1200 ரூ என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 March 2024 11:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!