India vs Australia 3rd ODI விராட்டும் அவுட்.. வெற்றிபெற போராடும் இந்தியா!
ரோஹித் சர்மா அவுட் ஆன நிலையில், நம்பிக்கை நட்சத்திரமாக ஆடி வந்த விராட் கோலி நாலாபுறமும் பந்துகளை விரட்ட, அடுத்தடுத்து ரன்கள் வந்துகொண்டே இருந்தது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் அவரும் மேக்ஸ்வெல் பந்திலேயே அவுட் ஆனார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் ஓபனர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவிக்க சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறந்தன. டேவிட் வார்னர் பங்குக்கு 4 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடித்தார். 56 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். மிட்சல் மார்ஷ் 84 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 13 பவுண்டரிகள் விளாசி 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தவறான ஷாட் ஆடி அவுட் ஆனார். இந்த விக்கெட்டை கைப்பற்றியது குல்தீப் யாதவ்.
அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 61 பந்துகளில் 74 ரன்களும், மார்னஸ் லபுக்ஷனே 58 பந்துகளில் 72 ரன்களும் குவித்தனர். ஆனால் இவர்களுக்கு பிறகு வந்தவர்கள் 20 ரன்களைக் கூட தாண்டவில்லை. ஆனால் முன்னதாகவே போதுமான ரன்களைக் குவித்திருந்தது ஆஸ்திரேலிய அணி.
50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி 352 ரன்கள் எடுத்து 353 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்நிலையில் இரண்டாவது பேட்டிங்கைத் தொடங்கியது இந்தியா. துவக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் இருவரும் களமிறங்கினர். மெதுவாக துவங்கினாலும் ஒருபுறம் ரோஹித் சர்மா ஆஸி பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். பவுண்டரிகள் அடிக்கடி வந்து கொண்டே இருந்தது.
வாஷிங்டன் சுந்தர் அவ்வப்போது ரன் அடித்தாலும் ஆமை வேக ஆட்டத்தையே தொடர்ந்த நிலையில், மேக்ஸ்வெல் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து ரோஹித்துடன் விராட் கோலி ஜோடி சேர இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை அடித்து நொறுக்கினர்.
நன்றாக ஆடி வந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா எதிர்பாராத விதமாக அவுட் ஆனார். மேக்ஸ்வெல் வீசிய பந்தை ஓங்கி அடிக்க அது அவரது முகத்தை நோக்கியே சென்ற நிலையில், எதிர்பாராதவிதமாக பிடித்து அவுட் ஆக்கினார். இதனால் இந்திய ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். தற்போது விராட் கோலியுடன் ஷ்ரேயாஸ் களமிறங்கி ஆடி வருகிறார்.
ரோஹித் சர்மா 6 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்திருந்தார்.
ரோஹித் சர்மா அவுட் ஆன நிலையில், நம்பிக்கை நட்சத்திரமாக ஆடி வந்த விராட் கோலி நாலாபுறமும் பந்துகளை விரட்ட, அடுத்தடுத்து ரன்கள் வந்துகொண்டே இருந்தது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் அவரும் மேக்ஸ்வெல் பந்திலேயே அவுட் ஆனார்.
விராட் கோலி 1 சிக்ஸரையும் 5 பவுண்டரிகளையும் பறக்க விட்டு அதிரடி காட்டினார். அதேநேரம் மறுபுறம் ஸ்ரேயாஸ் சாதாரண ஆட்டத்தையே வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 61 பந்துகளில் 56 ரன்களை மட்டுமே எடுத்திருந்த விராட் கோலி அவுட் ஆனதால் ரசிகர்கள் மேலும் ஏமாற்றமடைந்தனர். அடுத்து கேஎல் ராகுல் களமிறங்கி ஆடி வருகிறார்.
இந்தியா vs ஆஸ்திரேலியா: நேருக்கு நேர்
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட மற்றும் தொடர் போட்டி உள்ளது. இரு அணிகளும் 281 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளன, இதில் இந்தியா 153 வெற்றியும், ஆஸ்திரேலியா 124 வெற்றியும் பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 7 மற்றும் ஆஸ்திரேலியா 3 வெற்றி பெற்றுள்ளன.
சரித்திரம் படைக்க இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா க்ளீன் ஸ்வீப்பை பதிவு செய்துள்ளதால், கடைசி ஒருநாள் போட்டியில் சரித்திரம் படைக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றதில்லை, மேலும் தொடரின் இறுதிப் போட்டியில் அதைச் செய்ய அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
India vs Australia Live Score: IND's Playing XI!
1 Rohit Sharma (Captain), 2 Virat Kohli, 3 Shreyas Iyer, 4 KL Rahul (WK), 5 Suryakumar Yadav, 6 Ravindra Jadeja, 7 Washington Sundar, 8 Kuldeep Yadav, 9 Jasprit Bumrah, 10 Mohammed Siraj, 11 Prasidh Krishna
1 ரோகித் சர்மா (கேப்டன்), 2 விராட் கோலி, 3 ஸ்ரேயாஸ் ஐயர், 4 கே.எல் ராகுல் (WK), 5 சூர்யகுமார் யாதவ், 6 ரவீந்திர ஜடேஜா, 7 வாஷிங்டன் சுந்தர், 8 குல்தீப் யாதவ், 9 ஜஸ்பிரித் பும்ரா, 10 முகமது சிராஜ், 11 பிரசித் கிருஷ்ணா
AUS Playing XI!
1 David Warner, 2 Mitchell Marsh, 3 Steve Smith, 4 Marnus Labuschagne, 5 Glenn Maxwell, 6 Alex carey (wk), 7 Cameron Green,8 Marcus Stoinis,9 Pat Cummins (c), 10 Mitchell Starc, 11 Tanveer Sangha,
1 டேவிட் வார்னர், 2 மிட்செல் மார்ஷ், 3 ஸ்டீவ் ஸ்மித், 4 மார்னஸ் லாபுசாக்னே, 5 கிளென் மேக்ஸ்வெல், 6 அலெக்ஸ் கேரி (வாரம்), 7 கேமரூன் கிரீன், 8 மார்கஸ் ஸ்டோனிஸ், 9 பாட் கம்மின்ஸ் (c), 10 மிட்செல் ஸ்டார்க், 11 தன்வீர் சங்கா,
Tags
- Ind vs aus 3rd odi scorecard ind vs aus 3rd odi live score
- Ind vs aus 3rd odi live
- Ind vs aus 3rd odi dream11 prediction
- ind vs aus 3rd odi 2023
- India vs australia 3rd odi scorecard
- India vs australia 3rd odi live score
- India vs australia 3rd odi live
- India vs australia 3rd odi highlights
- india vs australia 3rd odi pitch report
- India vs australia 3rd odi prediction
- india vs australia live score 2023
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu