ஷமி அசத்தல்..! இந்திய அணிக்கு 277 ரன் இலக்கு..!

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 50 ஓவர்கள் முடிவில் 276 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது. இதனால் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க காத்திருக்கிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே எல் ராகுல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பமே அதிரடியாக முகமது சமி பந்து வீச மிட்சல் மார்ஷ் உடனடியாக அவுட் ஆகி வெளியேறினார். முதல் விக்கெட்டை துவக்கத்திலேயே இழந்துவிட்டதால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்தார் ஸ்டீவ் ஸ்மித்.
இருவரும் இணைந்து மெதுவாக ஸ்கோரை உயர்த்தி அவ்வப்போது கிடைக்கும் நல்ல பந்துகளை அடித்து விளையாடி வந்தனர். ஒரு வழியாக டேவிட் வார்னர் கொஞ்சம் அதிரடி காட்ட முயன்றார். இதன் பலனாக 2 சிக்ஸர்களை விளாசினார் அவர். அரை சதம் அடித்து கொஞ்ச நேரத்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.
ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் அவர் அவுட் ஆகி வெளியேற, களத்தில் நிற்கும் ஸ்மித் ஜோடியாக ஆட மார்னஸ் லாபுக்ஷனே களமிறங்கினார். மீண்டும் ஓரளவுக்கு நிலைத்து ஆடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். அடுத்து அவரசப்பட்ட ஸ்மித், சமி பந்து வீச்சில் விக்கெட்டை பறி கொடுத்தார்.
இதன்பிறகு வெகு நேரமாக விக்கெட் விழாமலேயே இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லாபுக்ஷனேவுடன் கேமரூன் க்ரீன் இருவரும் ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்த ரன் மிகவும் மெதுவாக நகர்ந்தது. அடுத்து மார்னஸ் லாபுக்ஷனே விக்கெட்டை எடுக்க ரவி அஸ்வின் வந்தார்.
33 வது ஓவரில் மார்னஸ் லாபுக்ஷனேவும் அவுட் ஆகி வெளியேறினார். சிறிது நேரத்தில் மழையால் ஆட்டம் தடைபட்டது. சிறிது நேரத்தில் ஆட்டம் மீண்டும் துவங்கியது.
ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்திருந்தது. 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க காத்திருக்கிறது இந்திய அணி.
India squad : KL Rahul (captain), Ravindra Jadeja (vice-capt), Shubman Gill, Ruturaj Gaikwad, Shreyas Iyer, Ishan Kishan, Suryakumar Yadav, Shardul Thakur, Jasprit Bumrah, Mohammed Shami, R Ashwin.
இந்திய அணி: கேஎல் ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஆர் அஷ்வின்.
Australia squad: Pat Cummins (c), Sean Abbott, Cameron Green, Josh Inglis, Marnus Labuschagne, Mitchell Marsh, Matt Short, Steve Smith, Marcus Stoinis, David Warner, Adam Zampa
ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேட்ச்), சீன் அபோட், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu