IND vs WI Squad இந்திய அணியில் அதிரடி மாற்றம்!

IND vs WI Squad இந்திய அணியில் அதிரடி மாற்றம்!
X
இந்திய அணியில் அதிரடி மாற்றம்... வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வெளுத்து வாங்கப்போகும் இந்திய அணி!

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யார் யார் இடம்பிடித்திருக்கிறார்கள் என்பதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை நழுவவிட்டது. இது இந்திய அணிக்கு இரண்டாவது தோல்வியாகும். இதனைத் தொடர்ந்து வரும் ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாட இருக்கிறது.

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை, அக்டோபரில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடர்களுக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளுடன் மோத இருக்கிறது. 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த தொடர் வரும் ஜூலை 12ம் தேதி துவங்க இருக்கிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்‌ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.

TEST Squad: Rohit Sharma (Capt), Shubman Gill, Ruturaj Gaikwad, Virat Kohli, Yashasvi Jaiswal, Ajinkya Rahane (VC), KS Bharat (wk), Ishan Kishan (wk), R Ashwin, R Jadeja, Shardul Thakur, Axar Patel, Mohd. Siraj, Mukesh Kumar, Jaydev Unadkat, Navdeep Saini.

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாத, ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

India’s ODI Squad: Rohit Sharma (Capt), Shubman Gill, Ruturaj Gaikwad, Virat Kohli, Surya Kumar Yadav, Sanju Samson (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Shardul Thakur, R Jadeja, Axar Patel, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Jaydev Unadkat, Mohd. Siraj, Umran Malik, Mukesh Kumar.

Tags

Next Story