Asia Cup 2023: ஆசிய கோப்பையில் யார் யார் ஆடுகிறார்கள்?

Asia Cup 2023: ஆசிய கோப்பையில் யார் யார் ஆடுகிறார்கள்?
X
ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் விளையாட இருக்கிறது. வரும் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன.

ஏற்கனவே இந்தியா தவிர மற்ற அணிகள் தங்களது வீரர்களை அறிவித்த நிலையில், இந்தியா மட்டுமே வீரர்களை அறிவிக்காமல் இருந்தது. இதற்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது உடல் தகுதியை இந்திய அணி நம்பியிருந்தது இருவரும் 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடி தங்களது உடல் தகுதியை நிரூபித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று டெல்லியில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலைமையில் மீட்டிங் நடந்தது. இதையடுத்து, பிற்பகல் 1.30 மணிக்கு இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர, திலக் வர்மா, இஷான் கிஷான், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள்:

  • ரோகித் சர்மா (கேப்டன்)
  • சுப்மன் கில்
  • விராட் கோலி
  • ஷ்ரேயாஸ் ஐயர்
  • கேஎல் ராகுல்
  • சூர்யகுமார் யாதவ்
  • திலக் வர்மா
  • இஷான் கிஷான்
  • ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்)
  • ரவீந்திர ஜடேஜா
  • அக்‌ஷர் படேல்
  • ஷர்துல் தாக்கூர்
  • ஜஸ்ப்ரித் பும்ரா
  • முகமது ஷமி
  • முகமது சிராஜ்
  • குல்தீப் யாதவ்
  • பிரசித் கிருஷ்ணா

சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

இந்த அணி மிகவும் சக்திவாய்ந்த அணியாகும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தலைமையில் அணியின் பேட்டிங் ஆல்-டைம் சிறந்த ஒன்றாகும். ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகமது ஷமி தலைமையில் அணியின் பந்துவீச்சு ஆல்-டைம் சிறந்த ஒன்றாகும்.

Tags

Next Story