ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கம
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய அணி
திங்கட்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஏர் ரைபிள் குழு போட்டியில் இந்தியா ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்தி தங்கம் வென்றது. இந்திய துப்பாக்கிச் சுடுதல் குழுவில் திவ்யான்ஷ் சிங் பன்வார், ருத்ரன்காஷ் பாலாசாஹேப் பாட்டீல் மற்றும் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் மொத்தம் 1893.7 புள்ளிகளைப் பெற்றனர், இது புதிய உலக சாதனையாகவும் நிரூபிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் பெற்றுத் தந்தனர். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா புதிய சாதனை படைத்தது. 1893.7 புள்ளிகள் பெற்று இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 19- ஆம் தேதி பாகுவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் சீனா வைத்த ரெக்கார்ட் ஆன 1893.3 புள்ளிகள் என்பதை இந்தியா இன்று முறியடித்துள்ளது.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் ஐஸ்வரி வெண்கலம் வென்றார், ருத்ரன்காஷ் நான்காவது இடத்தைப் பிடித்தார். இதற்கிடையில், ஆடவருக்கான நான்கு படகுப்போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 6:10:81 என்ற வினாடியில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இந்தியா இன்று ஒரு தங்கம் மற்றும் வெண்கலம் பெற்று தற்போது வரை 7-வது இடத்தில் உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளின் பதக்க பட்டியலில் இந்தியா தற்போது 6-வது இடத்தில் உள்ளது.
தங்கப் பதக்கப் போட்டியில் இலங்கையுடன் மோதும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மீதுதான் அனைவரது பார்வையும் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu