வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் நாளில் இந்திய அணி 278 ரன்கள்
இந்திய வீரர்கள் ஸ்ரேயாஸ் அய்யர்- புஜாரா.
இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கேப்டன் ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஒருநாள் போட்டித் தொடரை இழந்தது.
ஒருநாள் போட்டித் தொடரை இழந்தபோதிலும் கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்தது. அந்தப் இந்திய அணியின் இளம் வீரர் இசான் கிஸன் இரட்டைச் சதம் அடித்து புதிய சாதனை படைத்தார்.
இந்த நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டோகிராம் நகரில் உள்ள சகூர் அகமது சௌத்ரி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற அவர், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல், சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இருப்பினும், கே.எல். ராகுல் 22 ரன்களிலும், சுப்மன் கில் 20 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஓரளவு தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்தார். இருப்பினும், நிதான ஆட்டத்தை கடைபிடித்த புஜாரா 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய அக்ஸார் படேல் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 169 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 90 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய புஜாரா- ஸ்ரேயாஸ் அய்யர் இணை 5 ஆவது விக்கெட்டுக்கு 149 ரன்களை குவித்தது. இன்னும் 4 விக்கெட்கள் மட்டுமே கைவசம் உள்ள நிலையில் இந்திய அணி நாளை அதிரடியாக ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த பேட்டர்கள் உள்ள இந்திய அணி 90 ஓவர்களில் 278 ரன்களை எடுத்திருப்பது ஒன்றும் பெரிய ஸ்கோர் இல்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்தப் போட்டியில் வங்கசேதம் அணி பந்துவீச்சாளர்களின் பங்கு முக்கியமானவே இருந்தது என கூறலாம்.
அந்த அணியின் தாஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும், மெகிந்தி ஹாசன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கலீல் அகமது ஒருவிக்கெட்டை கைப்பற்றினார். இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், அஸ்வின், குல்தீப் யாதவ், உம்ரன் மாலிக், முகமது சிராஜ் ஆகியோர் இன்னும் களம் இறங்க வேண்டியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu