வெளியேறியது இந்தியா: கதம், கதம்தான் நமீபியாவை வென்றாலும் வாய்ப்பு இல்லையே கண்ணா
டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
வீரட் கோலி தலைமையிலான இந்திய அணி அணி டி20 உலக கோப்பையில் பங்கேற்றது. இதற்கு முன்னதாக இந்திய அணியில் இடம் பெற்ற, அனைத்து வீரர்களும் ஐக்கிய அமீரகத்தில் நடந்த ஐபிஎல்டி20 போட்டியில் அபாரமாக ஆடியவர்கள்தான், மிகவும் வலுமாவானது இந்திய அணி, கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பேசப்பட்டது.
டி20 உலக கோப்பை போட்டியில் இதுவரை பாகிஸ்தான் அணி, இந்தயாவை வென்றதே கிடையாது, இந்திய அணிதான் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.
அனைவரின் கூற்றையும் பொய்யாக்கும் விதமாக பாக்கிஸ்தான் அணி தனது விஸ்பவரூபத்தை காட்டியது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர. இந்திய அணி கேப்டன் வீரட் கோலி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இது விளையாட்டு வெற்றி, தோல்வி சகஜம், வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியாது என்று காட்டமாக கூறினார்.
இரண்டாவது போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர் கொண்டது. இதிலும் தோல்வியை தழுவியது.
இந்திய அணி போராடி தோல்வியை தழுவியிருந்தால் ரசிகர்கள் சற்று நிம்மிதியை அடைந்து இருப்பார்கள். ஆனால் பாக்கிஸ்தானிடம்10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணி, நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சூப்பர் சுற்று இரண்டாவது பிரிவில் இந்தியா, பாக்கிஸ்தான், நியூசிலாந்து, ஆப்க்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் விளையாடியது. பாக்கிஸ்தான் அணி 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று 10 புள்ளிகளுடனும், நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடனும், இந்தியா தற்போது 2 போட்டிகளில் வெற்றிப் பெற்ற 4 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடனும், நமீபியா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடனும் உள்ளது.
நேற்று நடந்த ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிப் பெற்று இருந்தால், இந்தியா அரையிறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.
ஆனால் இன்று மாலை நடைபெறும் பெறும் இந்தியா, நமீபிய இடையேயான போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றாலும், அரையிறுதி வாய்ப்பு இல்லை, இந்திய அணிக்கு கதம், கதம்தான், கதை முடிந்தது வெளியேறுகிறது இந்திய அணி.
இந்த நிலையில் தற்போது உள்ள இந்திய அணியின் நிலையை முன்னாள் வீரர்கள் மீம்கள் போட்டு மன வேதனையை பதிவிட்டுள்ளனர். சேவாக், ராகுல் காந்தி பேசும் படத்தை வெளியிட்டு, "கதம், பை.. பை.. டாடா குட் பை" என்று பதிவிட்டுள்ளார், வாசிம் ஜாஃபர் இருசக்கரவாகனத்தில் ஆப்கான், இந்தியா இரண்டையும் கழற்றி விட்டு நியூசிலாந்து வண்டியை எடுத்துச் செல்வது போல் மீம்பதிவிட்டுள்ளார்.
விவிஎஸ் லஷமண் அவர் நியூசிலாந்து அணியை பாராட்டித்தள்ளி விட்டார், "நியூசிலாந்து பிரில்லியண்ட் பீல்டிங், சேசிங்கில் டாம்பீகம் இல்லாமல் சேஸ் செய்து வெற்றி." என்று பாராட்டியுள்ளார்.
முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான், "2022-ல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக்கோப்பைக்காவது இன்னும் சிறப்பாகத் தயார் செய்து இந்தியா மீண்டெழ வேண்டும்" என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu