ஆஸி.யுடன் சென்னையில் , பாகிஸ்தானுடன் எங்கே? உலக கோப்பையில் இந்திய அணி போட்டிகள் இதோ!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை மும்பையில் முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியில் ஆட இருக்கிறது.
10 அணிகள் பங்கேற்கும் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 2019 ரன்னர்-அப்பான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அக்டோபர் 5ம் தேதி துவங்கும் போட்டிகள், நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 15-ம் தேதி இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் அக்டோபரில் ஐசிசி நிகழ்வில் மோதும் மூன்றாவது தொடர்ச்சியான ஆண்டாகும், இதற்கு முன்பு T20 உலகக் கோப்பை 2021 (UAE) மற்றும் T20 உலகக் கோப்பை 2022 (ஆஸ்திரேலியா) ஆகியவற்றில் சந்தித்தது.
போட்டி நடைபெறும் மைதானங்கள்:
சென்னை, அகமதாபாத், புனே, மும்பை, பெங்களூரு, தர்மசாலா, லக்னோ, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய ஒன்பது இடங்களில் ஒன்பது போட்டியாளர்களை இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது.
இந்தியா தனது கடைசி குரூப்-ஸ்டேஜ் ஆட்டத்தை நவம்பர் 11 ஆம் தேதி எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்றில் வெல்லும் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
1987, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா இந்த நிகழ்வை நடத்துவது இது நான்காவது முறையாகும். முந்தைய தொடர்கள் அனைத்திலும் இந்தியா மற்ற நாடுகளுடன் ஒரு இணை நாடாகவே இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக இந்தியா தனி நாடாக ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைத் தொடரை சுதந்திரமாக நடத்தவுள்ளது.
அரையிறுதிப் போட்டிகள் மும்பை (நவம்பர் 15) மற்றும் கொல்கத்தாவில் (நவம்பர் 16) நடைபெறுகிறது. மேலும் இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி அட்டவணை :
இந்தியா Vs ஆஸ்திரேலியா | அக்டோபர் 8
இடம் : சென்னை
இந்தியா Vs ஆஃப்கானிஸ்தான் | அக்டோபர் 11
இடம் : டெல்லி
இந்தியா Vs பாகிஸ்தான் | அக்டோபர் 15
இடம் : அகமதாபாத்
இந்தியா Vs வங்கதேசம் | அக்டோபர் 19
இடம் : புனே
இந்தியா Vs நியூசிலாந்து | அக்டோபர் 22
இடம் : தரம்சாலா
இந்தியா Vs இங்கிலாந்து | அக்டோபர் 29
இடம் : லக்னோ
இந்தியா Vs குவாலிபயர் | நவம்பர் 2
இடம் : மும்பை
இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா | நவம்பர் 5
இடம் : கொல்கத்தா
இந்தியா Vs குவாலிபயர் | நவம்பர் 11
இடம் : பெங்களூரு
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu